ரூ.200 கோடி பறித்த வழக்கு..நடிகை நோரா ஃபதேஹியிடம் 9 மணிநேரம் துருவித்துருவி விசாரணை!

டெல்லி : ரூ.200 கோடி பறித்த வழக்கில் நடிகை நோரா ஃபதேஹியிடம் டெல்லி போலீசார் 9 மணி நேரத்திற்கும் மேலாக துருவித்துருவி விசாணை நடத்தி உள்ளனர்.

டெல்லி தொழிலதிபர் மனைவியை மிரட்டி ரூ.200 கோடி பறித்தது தொடர்பான வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் என்பவரையும், அவரின் மனைவி லீனாவையும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

சுகேஷ் சந்திரசேகரிடம் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் ரூ.7 கோடிக்கும் அதிகமாக பரிசுப்பொருள்களை வாங்கி இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனால் குற்றப்பத்திரிகையில் ஜாக்குலின் பெர்னாண்டஸை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் குற்றவாளியாக சேர்த்துள்ளனர்.

சுகேஷ் சந்திரசேகர்

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் சுகேஷ் சந்திரசேகர். இவர், அகில இந்திய அளவில் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்கள், ஆட்சியாளர்கள், சினிமா பிரபலங்களுடன் நட்பு இருப்பதாக கூறி தொழில் அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்பட பலரை ஏமாற்றி பணம் மோசடி செய்ததாக புகார்கள் உள்ளன. சுகேஷ் சந்திரசேகர், தொழிலதிபர் மனைவியை ஏமாற்றி 200 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்

நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்

சுகேஷ் சந்திரசேகருக்கு எதிரான பண மோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த அக்டோபரில் விசாரணை நடத்தினர். இதையடுத்து, ஜாக்குலின் பெர்னாண்டஸ் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், சுகேஷிடம் பரிசு பொருள்களை பெற்ற மற்றவர்களை சாட்சியாக சேர்த்துவிட்டு என்னை மட்டும் குற்றவாளியாக சேர்த்திருப்பதாகவும், பாரபட்சமாக விசாரிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

9 மணி நேரம் விசாரணை

9 மணி நேரம் விசாரணை

இந்நிலையில், நடிகை நோரா ஃபதேஹியிடம் 9 மணிநேரத்திற்கும் மேலாக 50 கேள்விகளை கேட்டு அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை செய்துள்ளனர். இந்த விசாரணையில் நடிகை நோராவுக்கு சுகேஷ் பிஎம்டபியுள்யூ கார் பரிசாக வழங்கியதாக கூறியிருந்தார். இதுகுறித்து பதிலளித்த நடிகை நோரா, ஆரம்பத்தில் காரை வாங்கிக்கொள்ள முடிவு செய்தேன். ஆனால் பிறகு முடிவை மாற்றிக்கொண்டு கார் வேண்டாம் என்று எங்களது குடும்ப நண்பர் பாபியிடம் தெரிவித்துவிட்டேன் என்றார்.

துருவித்துருவி விசார ண

துருவித்துருவி விசார ண

சமீபத்தில் துபாயிலிருந்து சென்று வந்த சுகேஷ் சந்திரசேகர், அந்த காலகட்டத்தில் யாரையெல்லாம் தொலைபேசியில் சந்தித்தார் அல்லது தொடர்பு கொண்டார் என்று நோராவிடம் கேட்கப்பட்டதாகவும், மேலும், சுகேஷ் சந்திரசேகரிடமிருந்து நோரா மற்றும் ஜாக்குலின் பெர்னாண்டஸ் இருவரும் ஒருவருக்கொருவர் பரிசு பொருட்களை வாங்கியது குறித்து இருவருக்கும் தெரியவில்லை என்று மூத்த போலீஸ் அதிகாரி கூறியுள்ளார்.

அடுக்கடுக்கான கேள்விகள்

அடுக்கடுக்கான கேள்விகள்

தற்போது நோராவிடம் டெல்லி போலீஸார் ஒன்பது மணி நேரத்திற்கும் மேலாக அடுக்கடுக்கான 50 கேள்விகளை கேட்டுள்ளனர். இதில் ஏற்கனவே நோராவிடம் நடத்தப்பட்ட விசாரணை விபரங்களை மீண்டும் அதிகாரிகள் அவரிடமே கேட்டு உறுதி செய்து வருகின்றனர்.தேவைப்பட்டால் அவர் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.