லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை செப்டம்பர் 05 ஆம் திகதி நள்ளிரவில் மேலும் குறைக்கப்பட உள்ளதாகவும், புதிய விலைகள் பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சந்தையில் எரி வாயு விலை குறைந்துள்ள நிலையில், விலை குறைப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.