19 வயதில் தேசிய லொட்டரியில் சுமார் 10 மில்லியன் பவுண்டுகளை அவர் சொந்தமாக்கினார்.
வாரத்தில் ஏழு நாட்களும் மீனவ கிராமங்களுக்கு நிலக்கரி கட்டிகளை வழங்கும் வெறும் தொழிலாளி
தேசிய லொட்டரியில் 10 மில்லியன் பவுண்டுகளை அள்ளிய பிரித்தானியர் தற்போது கூலித் தொழிலாளியாக அல்லல்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியரான மைக்கேல் கரோலிக்கு 19 வயதில் அந்த அதிர்ஷ்டம் தேடி வந்தது. தேசிய லொட்டரியில் சுமார் 10 மில்லியன் பவுண்டுகளை அவர் சொந்தமாக்கினார்.
@pa
பெருந்தொகையை லொட்டரியில் வென்ற நேரத்தில் கரோல் பின்மேனாக பணிபுரிந்து வந்தார்,
அதன் பின்னர் 20 ஆண்டுகள் கழித்து, தற்போது வாரத்தில் ஏழு நாட்களும் மீனவ கிராமங்களுக்கு நிலக்கரி கட்டிகளை வழங்கும் வெறும் தொழிலாளியாக ஊதியம் ஈட்டி வருகிறார்.
தேசிய ஊடகங்கள் மொத்தமும் கொண்டாடப்பட்ட கரோல், திடீர் அதிர்ஷ்டம் கண்களை மறைக்க, போதை மருந்துக்கும் மதுவுக்கும் அடிமையானார்.
விபச்சார விடுதிகளில் வாடிக்கையாளரானால், வாழ்க்கையை சீரழிப்பதாக கூறி அவரது மனைவி விவாகரத்து பெற்று பிரிந்தார்.
@Mirrorpix
50,000 பவுண்டுகள் வரையில் செலவிட்டு, நிர்வாண விருந்துகளை ஏற்பாடு செய்து நண்பர்களுடன் கொண்டாடினார்.
மட்டுமின்றி, நாளுக்கும் 2,000 பவுண்டுகள் வரையில் மதுவுக்கும் போதை மருந்துக்கும் செலவிட்டார்.
தமது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை தாம் வருத்தமுடன் திரும்பி பார்க்கவில்லை எனவும், லொட்டரி வென்ற பின்னர் நீண்ட 10 ஆண்டுகள் தாம் மொத்தமாக வாழ்க்கையை அனுபவித்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
@pa
தமக்கு மிகவும் பிடித்தமான கால்பந்து அணி மீது 1 மில்லியன் பவுண்டுகள் முதலீடு செய்ததாக கூறும் கரோல், சுமார் 150,000 பவுண்டுகளுக்கு தங்க நகைகள் வாங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
2013ல் கடனாளியாக அறிவிக்கப்பட்ட கரோல், அன்றாட செலவீனங்களுக்காகவேனும் வேலை எதுவும் சிக்காத நிலையில் வீடற்றவராக மூன்று மாதங்கள் ஒரு ஹொட்டல் அறையில் தங்கியுள்ளார்.
ஒரு பிஸ்கட் தொழிற்சாலை மற்றும் இறைச்சிக் கூடத்தில் பணிபுரிந்த பிறகு, 39 வயதான கரோல் நிலக்கரி விநியோகம் செய்பவராக 2019 ல் ஸ்காட்லாந்திற்குச் சென்றார்,
மட்டுமின்றி தனது முன்னாள் மனைவியுடன் மீண்டும் இணைந்தார்.
@Daily Record
நீண்ட 10 ஆண்டுகள் ஆவேசத்துடன் வாழ்க்கையை அனுபவித்துவிட்டதாக கூறும் கரோல், தற்போதும் தாம் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், இந்த வாழ்க்கையும் தமக்கு மகிழ்ச்சியை தருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஒருமுறை நண்பர்களிடம் கூறுகையில், 2013ல் தாம் கடனாளியாக அறிவிக்கப்படும் வரையில் நீண்ட 10 ஆண்டுகளில் தாம் 4,000 பெண்களுடன் படுக்கையை பங்கிட்டதாக தெரிவித்திருந்தார்.