கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த பேரிகையில் வினாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி பக்தர்களுக்கு இஸ்லாமிய மக்கள் அன்னதானம் வழங்கினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது மூன்றாம் நாளான இன்று விநாயகர் சிலையை கரைப்பதற்காக அந்தந்த பகுதியில் இருக்கக்கூடிய அணைகள் மற்றும் ஏரிகளில் கரைப்பதற்கு ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.
அப்பொழுது சூளகிரி அடுத்த பேரிகை காந்தி சாலையில் பேரிகை ஜமாத் கமிட்டி சார்பாக ஊர்வலத்தில் சென்றவர்களுக்கு இஸ்லாமியர்கள் அன்னதானம் வழங்கினர்.
அங்கு இருந்த இஸ்லாமியர்கள் இரண்டு அண்டாக்களில் உணவை கொண்டு வந்து சமூக நல்லிணக்கத்தை பேணும் வகையில் ஊர்வலத்தில் சென்றவர்களுக்கு அவர்களே விநியோகம் செய்தனர்.
இந்து – இஸ்லாமிய மக்களிடையேயான மதம் கடந்த நேசத்தையும், சமூக ஒற்றுமையையும் பறை சாற்றுவதாக இந்த சம்பவம் அமைந்தது