வாஷிங்டன்:அமெரிக்காவில், ‘வால்மார்ட்’ பல்பொருள் அங்காடி மீது விமானத்தை மோதுவேன் என மிரட்டல் விடுத்த பைலட் பெரும் போராட்டத்திற்குப் பின் கைது செய்யப்பட்டார்.
அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணம் டுபெலா நகரில் பிரபல பல்பொருள் அங்காடியான வால்மார்ட் கிளை இயங்குகிறது. இந்த கட்டடத்துக்கு மேலே ஒரு சிறிய விமானம் சுற்றியது. அதில் இருந்து விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட பைலட், ‘வால்மார்ட் கட்டடத்தின் மீது விமானத்தை மோத விடுவேன்’ என மிரட்டினார்.
இதையடுத்து, போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். வால்மார்ட் அங்காடியில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அந்தப் பகுதி முழுதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.இதற்கிடையில், அந்த விமானத்தை இயக்கியது 29 வயது இளைஞர் என்பதும், அவர் அந்த விமான நிலையத்தின் ஊழியர் என்பதும், அந்த விமானத்தை கடத்தி வந்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.
விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் இருந்து, போலீஸ் உயர் அதிகாரிகள் அந்த இளைஞருடன் பேச்சு நடத்தினர். நீண்ட நேரத்துக்கு பின் விமானத்தை தரையிறக்கியவுடன் அந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். விசாரணை நடந்து வருகிறது. ஆனால், அவர் குறித்த தகவல்களை போல் வெளியிடவில்லை.இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பீதியை ஏற்படுத்தியது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement