கடந்த 2008-ஆம் ஆண்டு உலகப் புகழ்பெற்ற பாப் நட்சத்திரமாக இருந்த லேடிகாகா திடீரென திவால் ஆகிவிட்டதாக தன்னைச் சுற்றி இருந்தவர்கள் அறிவித்ததால் பெரும் அதிர்ச்சி அடைந்தார்.
எனக்கே தெரியாமல் எப்படி நான் திவால் ஆனேன் என்றும், இந்த விஷயம் எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது என்றும், என்னிடம் பணம் இல்லை என்று எல்லோரும் ஏன் சொல்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை என்றும் பேட்டி அளித்து இருந்தார்.
ஆனால் திவாலான கூறப்பட்ட பின்னர் சில ஆண்டுகளுக்கு பிறகு லேடி காகா சில மாதங்களில் பல மில்லியன் டாலருக்கும் மேல் வருமானம் ஈட்டியதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவில் 134 கோடிக்கும் அதிகமான ஆதார் அட்டைகள்.. ஜூலையில் மட்டும் எவ்வளவு?
ஆஸ்கார் விருது
13 முறை கிராமி விருது வென்ற லேடி காகா 2019ஆம் ஆண்டு மூன்று கிராமிகளை பெற்றார். அவர் புகழின் உச்சத்தில் இருந்த ஆண்டு அதுதான் என்றால் அது மிகையாகாது. 36 வயதான பாடகி மற்றும் நடிகை லேடிகாகாவின் உண்மையான பெயர் ஸ்டெபானி ஜெர்மானோட்டா. 2019ஆம் ஆண்டு சிறந்த பாடலுக்கான ஆஸ்கார் விருதை இவர் வென்றார்.
இசைத்துறை
லேடி காகா தனது 2008 ஆம் ஆண்டு முதல் ஆல்பமான “தி ஃபேம்” மூலம் இசைத்துறையில் அறிமுகமானார். நியூயார்க்கை சேர்ந்த இவர் தனது திறமையின் மூலம் படிப்படியாக முன்னேறி 13 கிராமி விருதுகளை வென்றார். உலகம் முழுவதும் பயணம் செய்து இசை நிகழ்ச்சிகளை நடத்தினார். மில்லியன் கணக்கான ஆல்பங்களை விற்று பெரும் செல்வத்தை சம்பாதித்தார்.
கடன் – திவால்
ஆனால் திடீரென அவர் $3 மில்லியன் கடனில் இருந்தார் என்றும், திவாலாகிவிட்டார் என்றும் அவரிடம் அவரது உதவியாளர்கள் தெரிவித்தபோது அவரால் நம்பவே முடியவில்லை. நான் உண்மையில் திவாலாகிவிட்டேனா? இது வேடிக்கையாக இருக்கிறது என்று அவர் பேட்டி அளித்தார்.
$3 மில்லியன் கடன்
என்னிடம் பணம் இல்லை என்று எல்லோரும் ஏன் சொல்கிறார்கள்? என்று எனக்கு தெரியவில்லை. இது அபத்தமானது. நான் $3 மில்லியன் கடனில் இருப்பதாக சொல்கிறார்கள்’ என்று அப்பாவியாக அவர் தெரிவித்தார்.
$50 மில்லியன் சம்பாதிப்பு
திவால் நிலைக்கு பின்னும் அவர் தீவிரமாக சம்பாதித்ததாக கூறப்படுகிறது. 2018 ஆம் ஆண்டில் லேடி காகா சுமார் $50 மில்லியன் சம்பாதித்துள்ளார் என்று ஃபோர்ப்ஸ் அறிக்கைகள் கூறுகின்றன.
பணம் ஒரு பொருட்டல்ல
ஆனால் அவர் ஒரு பேட்டியில் கூறியபோது, ‘நான் ஒரு பாப் நட்சத்திரமாக ஒரு தொழிலை தொடர்வது பணத்திற்காக அல்ல. ஒரு கலைஞனாக இருப்பதில் எனக்கு எப்போதும் சந்தோஷம். கலை ஒருபோதும் இறக்காது. நான் ‘பணத்தை பற்றி கவலைப்படுவதில்லை, எனது ரசிகர்களின் அன்பு மட்டும் எனக்கு போதும். என்னைப் பொறுத்தவரை என்னால் அர்ப்பணிப்புள்ள சிறந்த கலைஞனாக தொடர முடியும் என்று தெரிவித்தார். சுருக்கமாக அவர் அந்த பேட்டியில் தெரிவித்தது ‘பணம் எனக்கு பொருட்டல்ல’ என்பது தான்.
13-time Grammy winner Lady Gaga went bankrupt and was $3 million in debt!
13-time Grammy winner Lady Gaga went bankrupt and was $3 million in debt! | $3 மில்லியன் கடன்.. பாப்ஸ்டார் லேடிகாகா திவால் ஆனது எப்படி?