கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் அவருடைய மனைவி அனுஷ்கா ஷர்மா இருவரும் மும்பையின் தெற்கில் அமைந்துள்ள கடற்கரை நகரமான அலிபாக் என்ற இடத்தில் 8 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளனர்.
இந்திய செலிப்ரிடி உலகில் மிகவும் சக்தி வாய்ந்த ஜோடியாக இருக்கும் விராத் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா இரண்டு தனித்தனி ஒப்பந்தங்களில் இந்த 8 ஏக்கர் சொத்தை வாங்கியதாகத் தெரிகிறது.
2.54 ஏக்கர் மற்றும் 4.91 ஏக்கர் நிலத்தைச் சுமார், 19.24 கோடி ரூபாய் முதலீடு செய்து இந்த விராத் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா ஜோடி வாங்கியுள்ளனர்.
இனி வருமான வரிக்கு தனியாக ஜிஎஸ்டி வரி.. புதிய கட்டணம் அறிவிப்பு..!

மும்பை அலிபாக்
மும்பையில் அலிபாக் என்பது ஒரு கடற்கரையோர இடமாகும். மும்பையின் பணக்காரர்களிடையே பிரபலமானது விளங்கும் இந்த அலிபாக்-ல் பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள், பாலிவுட் நடிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட உயர்மட்ட நபர்களுக்கான புதிய ஹாட்ஸ்பாடாக உருவெடுத்துள்ளது.

விராட் மற்றும் அனுஷ்கா
விராட் மற்றும் அனுஷ்கா இருவரும் வியாழன் அன்று பதிவு செய்யப்பட்ட ஒப்பந்தத்திற்கு முத்திரைத் தாள் கட்டணமாக 1.15 கோடி ரூபாயைச் செலுத்தியுள்ளனர். இந்த ஒப்பந்தம் ஆகஸ்ட் 30 ஆம் தேதி செய்யப்பட்டு உள்ளது.

விகாஸ் கோஹ்லி
விராட் கோலியின் சகோதரர் விகாஸ் கோஹ்லி, அளிப்பாகின் ஜிராத் கிராமத்தில் உள்ள 8 ஏக்கர் நிலத்திற்கான ஒப்பந்தத்தை அவர்களின் சார்பாக முடித்தார். விராட் மற்றும் அனுஷ்கா ரியல் எஸ்டேட் டெவலப்பரான சமீரா ஹேபிடேட்ஸ் நிறுவனத்திடம் இருந்து இந்த நிலத்தை வாங்கியுள்ளனர்.

பண்ணை வீடு
விராத் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா ஏற்கனவே மும்பையில் பல வீடுகளை வாங்கியுள்ள நிலையில் இந்த 8 ஏக்கர் இடத்தில் பண்ணை வீடு கட்ட திட்டமிட்டுள்ளனர்.

விராத் கோலி
விராத் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து வாங்குவதாக முடிவு செய்தனர், ஆனால் பிசியாக இருந்த காரணத்தால் பத்திர பதிவு செய்ய முடியாமல் போனதாகத் தெரிகிறது.

ரவி சாஸ்திரி
தற்போது விராட் கோலி ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்காகத் துபாயில் உள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரர், இந்திய அணியின் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி-யும் சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு அலிபாக்கில் ஒரு வீட்டைக் கட்டியிருந்தார்.
Virat Kohli, Anushka Sharma buy 8-acre land in Alibaug for new farmhouse
Virat Kohli, Anushka Sharma buy 8-acre land in Alibaug for new farmhouse 8 ஏக்கரில் பண்ணை வீடு கட்டும் விராத் கோலி அனுஷ்கா ஷர்மா ஜோடி..!