ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இன்னும் சில நாட்களில் இந்தியாவில் முதல் ஆளாக 5G சேவையை அறிமுகப்படுத்த இருக்கிறது. மேலும் பின்லாந்து பல்கலைக்கழகத்தோடு சேர்ந்து 6G குறித்தான ஆராய்ச்சியில் ஈடுப்பட்டு வருகிறது.
இத்தகைய சிறப்புக்களை கொண்ட ஜியோ நிறுவனத்தின் ஆறாவது பிறந்தநாளை முன்னிட்டு ஆறு விதமான அம்சங்களோடு சலுகை ரீச்சார்ஜ் திட்டம் ஒன்றை வெளியிட்டுள்ளது அந்நிறுவனம்.
கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் துவங்கப்பட்டது ஜியோ நிறுவனம். துவங்கும்போதே அட்டகாசமான சலுகைகளை அள்ளி கொடுத்து குறைந்த காலத்திலேயே அதிகமான வாடிக்கையாளர்களை கைப்பற்றியது. தற்போது ஆறு வருடங்கள் கடந்து பல்வேறு முன்னணி நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி விட்டு முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வருகிறது.
தற்போது அதன் ஆறாம் ஆண்டு வெற்றிகரமான பயணத்தை கொண்டாடும் வகையில் அதன் வாடிக்கையாளர்களுக்கான சலுகை ரீச்சார்ஜ் திட்டம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த திட்டத்தில் இடம்பெற்றுள்ள சலுகைகளை கீழே காணலாம்.
இது ஒரு வருட ரீச்சார்ஜ் திட்டம். இதன் விலை 2999 மட்டுமே. இதன் மூலம் ஒரு நாளைக்கு 2.5GB டேட்டா கிடைக்கும். மேலும் அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 மெசேஜ் செய்து கொள்ளலாம். அதுமட்டுமின்றி டிஸ்னி+ஹாட்ஸ்டார் ஒரு வருடத்திற்கான இலவச பயன்பாட்டு உரிமையை பெறலாம். 75GB எக்ஸ்ட்ரா டேட்டா. Ajio , Netmeds Ixigo , ரிலையன்ஸ் டிஜிட்டல் , ஜியோ ஆகியவற்றின் சிறப்பு கூப்பன்களை பெறலாம்.