சமீபத்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முதல் பிஜேபி தலைவர் அண்ணாமலை, இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வரை ஒரு வரி ட்வீட் போட்டு வருகின்றனர். அதுதான் தற்போது ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. திடீரென்று அவர்கள் இப்படி ட்வீட் போட கரணம் என்ன? எங்கேயிருந்து துவங்கியது இந்த ட்ரெண்டிங்?
ட்விட்டர் தளத்தில் உலக அளவில், நாடுகள் அளவில் என தினம்தோறும் ஏதாவது ஒரு விசயம் ட்ரெண்டிங்கில் இருந்து வரும். அப்படி சமீபத்தில் உலக தலைவர்கள் முதல் உள்ளூர் தலைவர்கள் வரை தங்களுக்கு புடித்த ஏதோ ஒரு வார்த்தையை அவர்களின் செயல்பாட்டை விளக்கும் ஒற்றை வார்த்தையை ஒரு வரி டீவீட்டாக பதிவிட்டு வருகின்றனர்
குறிப்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “திராவிடம்” என்றும் மார்க்சிஸ்ட் எம்பி சு.வெங்கடேசன் “சமத்துவம்” என்றும், தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை “தமிழன்” என்றும் இன்னும் பல தலைவர்கள் மற்றும் அமைப்புகளும் கூட இது போன்ற டீவீட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். இது தமிழகத்தில் ஒரு அரசியல் பரப்பரப்பையே உருவாக்கி உள்ளது.குறிப்பாக இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கூட “கிரிக்கெட்” என்று பதிவிட்டிருந்தார்.
இந்த விசித்திரமான ட்ரெண்டை துவங்கியது அமெரிக்காவை சேர்ந்த “Amtrak” என்ற ரயில் நிறுவனம் தான். நேற்று 12.30மணி அளவில் trains என்று இந்த நிறுவனத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்திலிருந்து ட்வீட் ஒன்று தவறுதலாக பதிவிடப்பட்டிருந்தது. அந்த பதிவு போடப்பட்ட பிறகு பலரும் இதை ஏதோ பொழுதுபோக்குக்காக போடப்பட்ட போஸ்ட் என நினைத்து கொண்டு வாஷிங்டன் போஸ்ட், நாசா மற்றும் அமெரிக்க அதிபர் ஜோபைடன் உட்பட பலரும் ஒரு வார்த்தை ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில்தான் இந்த ட்ரெண்டிங் தமிழகத்திலும் வைரலாகி தமிழகத்தின் பல்வேறு பிரபலங்கள் ஒரு வார்த்தை டீவீட்டை பதிவிட்டு வருகின்றனர். நீங்களும் உங்களுக்கு புடித்த அந்த ஒரு வார்த்தையை கமெண்ட் பாக்சில் பதிவிட்டு ட்ரெண்டோடு ஐக்கியமாகுங்கள்.