SilambarasanTR: ஹெலிகாப்டரில் வராத சிம்பு; யுவனின் என்ட்ரி; கமலின் டிப்ஸ்| VTK ஆடியோ லாஞ்ச் ஹைலைட்ஸ்

தன் படங்களின் ஸ்டைலிஷாான மேக்கிங், ப்ரஷ்ஷான காதல் காட்சிகள், பாடல்கள் இவைதான் இயக்குநர் கௌதம் மேனனின் ஸ்பெஷல். அவரும் நடிகர் சிலம்பரசனும் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம்தான் ‘வெந்து தனிந்தது காடு’. ஏ.ஆர் ரஹ்மானின் இசையில் எழுத்தாளர் ஜெயமோகனின் எழுத்தில் கௌதம் மேனன் படத்தை இயக்கியிருக்கிறார்.

படத்தை, வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

கமல்ஹாசன் பங்கேற்று மெட்டாவெர்ஸ் மூலம் திரைப்படத்தின் டிரைலரை வெளியிட்டார். இசை வெளியீட்டு விழாவிற்கு ஹெலிகாப்டரில் வருவார் என்று எதிர்பார்த்து காத்திருந்த சிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்தார் சிம்பு. இசை வெளியீட்டு விழா நடந்து கொண்டிருக்கும் வேளையில் திடீரென்று சர்ப்ரைஸாக என்ட்ரி கொடுத்தார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. வெகு நாட்களுக்குப் பிறகு சென்னையில் நடக்கும் இசை வெளியீட்டு விழாவிற்கு பின்னணி பாடகர் ஸ்ரேயா கோஷல் பங்கேற்றார். இசை புயலின் லைவ் பெர்பார்மன்ஸுடன் கோலாகலமாக நடைபெற்றது. இவற்றையெல்லாம்விட அரங்கத்தின் செட் தான் நெட்டிசன்களிடையே பேசு பொருளாக்கியது.

SilambarasanTR with A.R.Rahman

இந்த இசை வெளியீட்டு விழாவில் முதலில் வந்து பேசிய இயக்குநர் கௌதம் மேனன், “ `நதிகளில் நீராடும் சூரியன்’ திரைப்படத்திற்கு தான் முதலில் பிளான் செய்தோம் அதற்கான வேலைகள் செய்தோம். ஏ ஆர் ரகுமான் மூன்று பாடல்களை கம்போஸ் செய்துவிட்டார். அதன் பிறகு ஜெயமோகனை சந்தித்தேன், அவர்தான் எனக்கு இந்த கதையை எழுதிக் கொடுத்தார்.”என்று நதிகளில் நீராடும் சூரியன் திரைப்படத்திற்கான எதிர்பார்ப்புகளை தூவிச் சென்றார்.

இதனைத் தொடர்ந்து வந்து பேசிய திரைப்படத்தின் கதாநாயகன் சிம்பு நன்றிகளைக் கூறி உரையைத் தொடங்கினார், ” இந்தத் திரைப்படம் தொடங்கும் வேளையில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் என்னை ஹெலிகாப்டரில் அழைத்து செல்வதாக சொன்னார் அதேபோல் இன்று காலை ஹெலிகாப்டர் அனுப்புவதாகச் சொன்னார், நான்தான் மறைத்து விட்டேன் ஹெலிகாப்டரில்வந்தது நான் இல்லை. இந்தத் திரைப்படத்தின் கிளைமாக்ஸில் ஒரு விஷயம் இருக்கிறது. என் அப்பாவின் மருத்துவத்திற்காக வெளிநாடு செல்வதற்கு ஐசரி கணேஷ் மிகவும் உதவியாக இருந்தார்.” என்று பேசியவர் விழாவில் பங்கேற்ற அனைவரையும் பற்றியும் ஒரு வார்த்தையில் அழகான பதிலளித்து கடைசியில் ரசிகர்கள் என் உயிர் மா என்று கூறி தனது உரையை முடித்துக் கொண்டார்.

SilambarasanTR with KamalHassan

இறுதியாக மேடைக்கு வந்த உலகநாயகன் கமலஹாசன், ” தமிழ் சினிமாவை தூக்கி நிறுத்தியது எந்த நடிகர்களும் அல்ல, அது ரசிகர்கள் தான், புதிதாக கொடுக்க கொடுக்க ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள். தமிழ் படங்களை தூக்கி நிறுத்துவதும் தமிழ் படம் தான். தமிழ் படங்களை கெடுப்பதும் தமிழ் படம் தான், நல்ல படங்களை கொடுக்க வேண்டும் மக்கள் ஆதரவு தருவார்கள.” என்று பேசியவர் சிம்புவிடம்,” நீங்கள் நிறைய படங்கள் நடிக்க வேண்டும்,ஒரு படம் மட்டும் நடிக்க வேண்டும் என்றால் அது என்னுடன் தான் நடிக்க வேண்டும்.” என்றவரிடம் அதையும் நான் தான் தயாரிப்பு செய்வேன் என்று பதிலளித்தார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்.

தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் கேரளா ஆந்திரா திரையரங்க உரிமையை ராஜ்கமல் பிலிம்ஸ் வாங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார், அதற்கு நாளைக்கு ஆபிஸுக்கு வாருங்கள் என்று பதிலளித்தார், கமல் ஹாசன்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.