15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான லீக் சுற்று ஆட்டங்கள் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், ஏ, பி என இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடித்த இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இந்த 4 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இறுதியில் அட்டவணையில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழையும்.
இந்நிலையில், இன்று முதல் தொடங்கும் சூப்பர் 4 சுற்றில், அதன் முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்-இலங்கை அணிகள் சார்ஜாவில் மோதுகின்றன.
முகமது நபி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி, ஏற்கனவே நடந்த லீக் சுற்று ஆட்டத்தில் இலங்கையை புரட்டியெடுத்தது. அந்த ஆட்டத்தில் இலங்கை அணி வெறும் 105 ரன்னில் சுருண்டது. அந்த இலக்கை துரத்திய ஆப்கான் அணி 10.1 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்து அசத்தியது.
ஆப்கானிஸ்தான் அணியில் முஜீப் ரகுமான், ரஷித்கான் சுழல் ஜாலம் செய்து வருகின்றனர். 2021 முதல் டெத் ஓவர்களில் அதிகபட்ச ஸ்ட்ரைக் ரேட் (214.29) மற்றும் பவுண்டரிகள் விரட்டும் சிறந்த சதவீதத்தை (30.3) கொண்டுள்ள நஜிபுல்லா சத்ரான் அணியின் பேட்டிங்கிற்கு மிடில் – ஆடரில் வலுசேர்க்கிறார். மேலும், சம பலத்துடன் உள்ள ஆப்கானிஸ்தான் மீண்டும் இலங்கையை மீண்டும் ஒரு முறை சாய்த்து, தொடரில் ஆதிக்கம் செலுத்தும் முனைப்புடன் தயாராகி வருகிறது.
தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானிடம் தோல்வியை தழுவி இருந்தாலும், அடுத்த ஆட்டத்தில் வங்க தேச அணியை வீழ்த்தி சூப்பர் – 4 – சுற்றுக்குள் கால்பதித்தது. இலங்கை அணியில் தீக்ஷனா, ஹசரங்கா ஆகியோரின் சுழற்பந்து வீச்சு முதல் இரு ஆட்டத்தில் மெச்சும்படி இல்லை. இன்றைய ஆட்டத்தில் இவர்கள் தாக்கத்தை ஏற்படுத்துவார்களா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
முந்தைய தோல்விக்கு பழிதீர்க்கும் வேட்கையுடன் காத்திருக்கும் இலங்கை அணி – சூப்பர் 4 சுற்றில் முதல் வெற்றியை சுவைக்க நினைக்கும் ஆப்கான் அணி என இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. ஷார்ஜா மைதானத்தில் 2-வது பேட்டிங் செய்யும் அணிக்கு ஆடுகளம் அனுகூலமாக இருப்பதால் ‘டாஸ்’ முக்கிய பங்கு வகிக்கும்.
இரு அணி வீரர்கள் பட்டியல் பின்வருமாறு:
ஆப்கானிஸ்தான் அணி:
ஹஸ்ரதுல்லாஹ் ஜசாய், ரஹ்மானுல்லா குர்பாஸ் , இப்ராஹிம் சத்ரான், முகமது நபி (கேப்டன்), நஜிபுல்லா ஜத்ரான், கரீம் ஜனத், ரஷீத் கான், அஸ்மத்துல்லா உமர்சாய், நவீன்-உல்-ஹக், முஜீப் உர் ரஹ்மான், சமிருல்லா ஷிக்மான், ஃபசல்ஹாக் ஷாஹிதி, அஃப்சர் ஜசாய், ஃபரீத் அகமது மாலிக், உஸ்மான் கானி, நூர் அகமது
இலங்கை அணி:
பதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ்(விக்கெட் கீப்பர்), சரித் அசலங்கா, தனுஷ்க குணதிலக, பானுக ராஜபக்ச, தசுன் ஷனக (கேப்டன்), வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரத்ன, மஹீஷ் தீக்ஷனா, அசித்த பெர்னாண்டோ, டில்ஷான் மதுஷங்க, தினேஷ் சண்டிமால், தினேஷ் சண்டிமால், எஸ். ஜெஃப்ரி வான்டர்சே, அஷேன் பண்டார, பிரவீன் ஜெயவிக்ரம, நுவனிது பெர்னாண்டோ, பிரமோத் மதுஷன், மதீஷ பத்திரன, நுவான் துஷார
இரு அணியின் உத்தேச வீரர்கள் பட்டியல்:
ஆப்கானிஸ்தான் அணி:
ஹஸ்ரத்துல்லா ஜசாய், ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இப்ராஹிம் சத்ரான், நஜிபுல்லா ஜத்ரான், கரீம் ஜனத், முகமது நபி (கேப்டன்), ரஷீத் கான், அஸ்மத்துல்லா உமர்சாய், நவீன்-உல்-ஹக், முஜீப் உர் ரஹ்மான், ஃபசல்ஹாக் ஃபரூக்கி.
இலங்கை அணி:
பதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), சரித் அசலங்க, தனுஷ்க குணதிலக்க, பானுக ராஜபக்ஷ, தசுன் ஷனக (கேப்டன்), வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரத்ன, மஹீஷ் தீக்ஷனா, அசித்த பெர்னாண்டோ, டில்ஷான் மதுஷங்க.
Asia Cup, 2022Sharjah Cricket Stadium, Sharjah 03 September 2022
Sri Lanka
Afghanistan
Match Yet To Begin ( Day – Super Four – Match 1 ) Match begins at 19:30 IST (14:00 GMT)
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil