ஆசிய வெற்றிக்கிண்ண கிரிக்கெட் சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் இலங்கை வெற்றி  

ஆசிய வெற்றிக்கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்று போட்டியின் முதல் போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

தொடரின் சூப்பர் 4 சுற்று போட்டியின் முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், இலங்கை அணிகள் மோதின.

சார்ஜாவில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் நாணய வுழற்சியில் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 175 ஓட்டங்களைப் பெற்றது.

ஆப்கானிஸ்தான் அணி சார்பில் குர்பாஸ் 45 பந்துகளில் 84 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

176 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.1 ஓவரில் 6 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.