‘தினமலர்’ நாளிதழ், சென்னை பள்ளிக்கரணை ஸ்ரீபாலாஜி பல் மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை சார்பில் புதுச்சேரியில் நேற்று நடைபெற்ற, ‘மன அழுத்த மேலாண்மை மற்றும் மாணவர் பாதுகாப்பு’ குறித்த சிறப்பு கருத்தரங்கில் பள்ளி முதல்வர்கள், தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
‘தினமலர்’ நாளிதழ், சென்னை பள்ளிக்கரணை ஸ்ரீபாலாஜி பல் மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை சார்பில், பள்ளி ஆசிரியர்களுக்கான ‘மன அழுத்த மேலாண்மை மற்றும் மாணவர்கள் பாதுகாப்பு’ குறித்த சிறப்பு கருத்தரங்கம், புதுச்சேரி மறைமலையடிகள் சாலை, கிரீன் பேலஸ் ஓட்டலில் நேற்று நடந்தது. புதுச்சேரி தினமலர் நிர்வாகி கே.வெங்கட்ராமன், சிறப்பு விருந்தினர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். புதுச்சேரி பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் ருத்ர கவுடு குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்து கருத்தரங்கின் நோக்கம் குறித்து சிறப்புரை ஆற்றினார்.
சென்னை பள்ளிக் கரணை ஸ்ரீபாலாஜி பல் மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையின் பொது சுகாதார துறைத் தலைவர் டாக்டர் அனிதா, முதுநிலை விரிவுரையாளர் டாக்டர் சுகன்யா, சென்னை வாவ் மைண்ட் பீகேவரல் கிளினிக் நிறுவனரும், கல்வியாளருமான டில்லிபாபு, புதுச்சேரி கல்வியாளர் புகழேந்தி ஆகியோர், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் எதிர்நோக்கும் மன அழுத்த மேலாண்மை மற்றும் மாணவர்கள் பாதுகாப்பு குறித்து ஆலோசனை வழங்கினர். கருத்தரங்கிற்கு பிறகு நடந்த கலந்துரையாடலில், மன அழுத்த பிரச்னையை அணுகும் முறை குறித்து ஆசிரியர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு கல்வியாளர்கள் பதில் அளித்தனர். கருத்தரங்கில் புதுச்சேரி, கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இருந்து அரசு மற்றும் தனியார் பள்ளி முதல்வர்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement