கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலையானது அவ்வப்போது ஏற்றத்தினை கண்டாலும், மொத்தத்தில் சரிவில் காணப்படுகின்றது. இது அமெரிக்காவின் மத்திய வங்கியானது 75 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் சரிவில் காணப்படுகின்றது.
இதற்கிடையில் அமெரிக்காவின் மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என்ற கருத்துக்கு மத்தியில், டாலரின் மதிப்பு ஏற்றம் கண்டு வருகின்றது.
ஏற்கனவே இரண்டு தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு டாலரின் மதிப்பானது 109.97 ஆக உச்சம் தொட்டுள்ளது. இதற்கிடையில் தொடர்ந்து தங்கம் விலையில் தொடர்ந்து அழுத்தத்தில் காணப்படுகின்றது.
கிட்டதட்ட 2 மாத சரிவில் தங்கம் விலை.. இன்று எவ்வளவு குறைஞ்சிருக்கு தெரியுமா?
வட்டி அதிகரிக்கலாம்
எனினும் தொடர்ந்து பணவீக்க விகிதம் வரலாறு காணாத அளவு ஏற்றத்தினை கண்டு வரும் நிலையில், கட்டாயம் வட்டி அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்காவின் மத்திய வங்கி மட்டும் அல்லாது, வரவிருக்கும் கூட்டத்தில் இசிபி கூட்டத்திலும் வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய தரவுகள்
கடந்த வாரம் வெளியான அமெரிக்காவின் பி எம் ஐ குறித்தான தரவானது, ஆகஸ்ட் மாதத்தில் அதிகரித்த நிலையில், இது மேலும் தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தியது. இதே வேலை வாய்ப்பு குறித்தான தரவும் கடந்த வாரம் வெளியாகியது. அதில் வேலையின்மை விகிதமானது சற்று அதிகரித்து காணப்பட்டது. தற்போதைய காலகட்டத்தில் வட்டி விகிதம் அதிகரித்தாலும், 4வது காலாண்டில் வட்டி விகிதம் பொருளாதார வளர்ச்சி மந்த நிலையால் மீண்டும் குறையத் தொடங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய லெவல்கள்
தொடர்ந்து சர்வதேச சந்தையில் 6வது வார சரிவில் காணப்படுகின்றது. தங்கத்தின் அடுத்த முக்கிய சப்பொர்ட் லெவலாக 1680 டாலர்கள் உள்ளது. ஆக இது குறைந்த விலையில் வாங்க சரியான வாய்ப்பாக பார்க்கப்படுகின்றது.
இதே இந்திய சந்தையினை பொறுத்தவரையில் 10 கிராமுக்கு 48,800 ரூபாயினை தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே ஏற்றம் காணும் பட்சத்தில் 51,200 ரூபாய் மற்றும் 51,500 ரூபாயினை தொடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தங்கம் விலையானது அழுத்தத்தில் காணப்படும் நிலையில் இந்த முக்கிய சப்போர்ட் லெவலை தொடலாம் என எதிர்பார்க்கப்படுகியது.
உற்பத்தி குறைக்கப்படுமா?
வரும் வாரத்தில் தங்கம் விலையில் டாலர் முதல் பல காரணிகள் கவனத்தில் கொள்ள வேண்டியவையாக உள்ளன. குறிப்பாக ஓபெக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் உற்பத்தி குறைக்கப்பட வாய்ப்புகள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சீனாவில் தேவை குறைந்து வரும் நிலையில், இது உற்பத்தி குறைப்புக்கு வழிவகுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எனர்ஜி பற்றாக்குறை
ஏற்கனவே எனர்ஜி பற்றாக்குறையால் தத்தளித்து வரும் ஐரோப்பிய நாடுகள், தற்போது வட்டி விகிதமும் அதிகரித்தால், அதன் காரணமாக வளர்ச்சி விகிதமானது இன்னும் மந்த நிலைக்கு செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இது தங்கம் விலைக்கு ஆதாரவாக அமையுமோ என்ற அச்சமும் இருந்து வருகின்றது.
Gold price hits 6 week low: is it right time to buy?
Gold price hits 6 week low: is it right time to buy?/ஆறு வார சரிவில் தங்கம் விலை.. விலை குறையுமா ஏறுமா.. இது சரியான இடமா?