டெல்லி: இந்தியா 2029ல் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக வளர்ச்சி காணலாம் என எஸ்பிஐ ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
இந்தியா மற்ற அண்டை நாடுகளுடன் ஒப்பிடும்போது மிக வேகமாக வளர்ச்சி கண்டு வருகின்றது. மற்ற சர்வதேச நாடுகள் பணவீக்கத்தின் பிடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில், இந்தியா அந்தளவுக்கு மோசமான நிலையில் என நிபுணர்கள் கூறி வருகின்றனர்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தியா நடப்பு நிதியாண்டில் இரு இலக்கில் வளர்ச்சி காணலாம். இங்கு ரெசசனுக்கு பூஜ்ஜிய சதவீதமே வாய்ப்பு உள்ளது என நம்பிக்கை தெரிவித்து இருந்தார்.
சீனாவின் சரிவு இந்தியாவுக்கு பலன் தரும்.. எப்படி தெரியுமா.. எஸ்பிஐ என்ன சொல்லியிருக்கு பாருங்க!
இங்கிலாந்தினை விஞ்சிய இந்தியா
இந்த நிலையில் முதலீட்டாளர்களுக்கு இன்னும் நம்பிக்கை அளிக்கும் விதமாக எஸ்பிஐ-யின் இந்த அறிக்கையும் வந்துள்ளது. இந்தியா ஏற்கனவே இங்கிலாந்தினை முந்திவிட்டது. தற்போது ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக உள்ளது.
இந்தியா மிகப்பெரிய உள்கட்டமைப்பு மாற்றங்களை செய்துள்ளது. தற்போது இந்தியா 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இது இங்கிலாந்தினை முன்னேறியுள்ளது.
ஜிடிபி வளர்ச்சி
2014ல் இந்தியாவின் ஜிடிபி 2.6% ஆக இருந்த நிலையில், தற்போது 3.5% என்ற லெவலில் வளர்ச்சி கண்டுள்ளது. இது உலகளவில் 2027ல் ஜெர்மனியின் 4% அளவினையும் தாண்ட வாய்ப்புள்ளது என அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தியா 2014ல் இருந்து எடுத்து வரும் பல்வேறு வளர்ச்சி குறித்தான நடவடிக்கைக்கு மத்தியில், இந்தளவுக்கு வளர்ச்சி விகிதத்தினை எட்டியுள்ளது.
ஜெர்மனியை விஞ்சலாம்
ஆக தற்போதைய வளர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் 2027ல் இந்தியா ஜெர்மனியை விஞ்ச வேண்டும். 2029ல் ஜப்பானையும் விஞ்ச வேண்டும். குறிப்பாக ஜூன் காலாண்டு அறிக்கையினை சுட்டிக் காட்டி, இந்தியாவின் வளர்ச்சி விகிதம் வேகமாக இருக்கும் என்றும் அந்த ஆய்வறிக்கையானது சுட்டிக் காட்டியுள்ளது. நடப்பு நிதியாண்டில் இந்தியா வேகமாக இருக்கும் ஒரு பொருளாதார நாடாக உள்ளது.
எதிர்பார்ப்பு
எனினும் இந்த அறிக்கையில் நடப்பு நிதியாண்டிற்கான வளர்ச்சி விகிதமானது 6.7 – 7.7% ஆக இருக்கலாம் என்றும் கணித்துள்ளது. நாங்கள் மிக நம்பிக்கையாக உள்ளோம். சர்வதேச அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் , உலகில் 6 – 6.5% வளர்ச்சி இருக்கலாம் என நாங்கள் நம்புகிறோம்.
சீனாவின் இழப்பு இந்தியாவுக்கு லாபம்
குறிப்பாக சீனாவில் நிலவி வரும் மந்த நிலை இந்தியாவுக்கு சாதகமாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவின் முதலீடுகளை அதிகரிக்க வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஆப்பிள் நிறுவனம் சீனாவில் அறிமுகப்படுத்திய ஐபோன் உற்பத்தியினை, இந்தியாவில் தொடங்கியுள்ளது. ஆக இதுபோன்ற பல வாய்ப்புகள் இந்தியாவுக்கு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
வருமானம் அதிகரிக்கலாம்
அறிக்கைகளின் படி, இந்தியாவில் தனி நபர்களின் வருமான விகிதமும் தற்போதைய நிலையில் இருந்து பல மடங்கு அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனி நபர் வருமானம் அதிகரித்தாலே அது மக்களின் நுகர்வினை அதிகரிக்கலாம். இதனால் தேவை அதிகரிக்கலாம். இது இந்தியாவின் உற்பத்தி விகிதத்தினை தூண்ட வழிவகுக்கலாம். மொத்தத்தில் இந்தியாவின் வளர்ச்சி அதிகரிக்க இது சாதகமாக அமையலாம்.
India to see growth beyond Germany, Japan: SBI report
India to see growth beyond Germany, Japan: SBI report/இந்தியா 3வது பெரிய பொருளாதாரமாக வளர்ச்சி காணும்.. எஸ்பிஐ-ன் சூப்பர் அப்டேட்!