உயர்கல்வி நிறுவனங்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் – UGC பரிந்துரை

புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் உயர்கல்வி நிறுவனங்களை பன்முகத்தன்மை கொண்ட உயர்கல்வி நிலையங்களாக மாற்ற பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரை செய்துள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை UGC வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை பன்முக தன்மை வாய்ந்த உயர்கல்வி நிலையங்களாக மாற்றுவதை புதிய கல்விக் கொள்கை முன்னிறுத்துகிறது. அந்த வகையில் வருகின்ற 2035ஆம் ஆண்டுக்குள்ளாக இந்த இலக்கை அடைய வேண்டும் என்பது புதிய கல்விக் கொள்கையின் முக்கிய நோக்கமாகும்.
image
அந்த வகையில், பன்முகத்தன்மை வாய்ந்த ஆராய்ச்சி பல்கலைக்கழகங்கள், பன்முகத்தன்மை கொண்ட கற்பிக்கும் பல்லைக்கழகங்கள் மற்றும் பட்டமளிக்கும் தன்னாட்சி பெற்ற கல்லூரிகள் என மூன்று வகையான உயர்கல்வி நிலையங்களை 2035ஆம் ஆண்டிற்குள் ஏற்படுத்த வேண்டும் என்று இலக்கு நிர்ணையிக்கப்பட்டுள்ளது
image
இதனையடுத்து நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் இதற்கான பணியை தொடங்க பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரைத்துள்ளது.
இதற்காக நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிலையங்கள் பன்முகத்தன்மை கொண்ட கல்வி நிலையங்களாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு ugc கடிதம் எழுதியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.