ஆலப்புழா: சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் கேரளாவின் புகழ்பெற்ற ஆலப்புழா படகுப் போட்டி வெகுவிமரிசையாக தொடங்கியுள்ளது. படகுப்போட்டியை காண ஏராளமான பாரவையாளர்கள் குவிந்துள்ளனர். கேரளாவின் புகழ்பெற்ற ஆலப்புழா படகுப் போட்டி கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்தது.
இந்நிலையில் 68-வது ஆண்டு படகு போட்டி தற்போது தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு நடைபெறும் படகுப்போட்டியில் 72 சிறிய படகுகள் கலந்து கொள்ளும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதே போல் 20 பெரிய படகுகளும் இந்த படகுப்போட்டியில் கலந்துகொள்ள உள்ளது. இந்த போட்டிகளை காண கேரளா, தமிழகம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான பார்வையாளர்கள் ஆலப்புழாவில் குவிந்துள்ளனர்.
இன்று காலை தொடங்கிய இந்த படகுப்போட்டி மாலை வரை நடைபெற உள்ளது. இதில் இறுதி போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெறும் அணிக்கு நேரு கோப்பை நினைவு பரிசாக வழங்கப்பட உள்ளது.