சென்னை: தன்னுடைய ட்விட்டர் கணக்கு மீட்கப்பட்டுவிட்டதாக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜியின் ட்விட்டர் கணக்கு மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டது. அதில், கிரிப்டோகரன்சி தொடர்பாக பதிவிடப்பட்டிருந்தது. அவரது ட்விட்டர் கணக்கின் பெயரும் மாற்றப்பட்டது. கிரிப்டோ கரன்சி தொடர்பாக தகவல்கள் தொடர்ந்து பதிவிடப்பட்டு வந்தன.
இந்த நிலையில், தனது ட்விட்டர் பக்கம் மீட்கப்பட்டதாக செந்தில்பாலாஜி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “அன்புள்ள அனைவருக்கும், எனது ட்விட்டர் கணக்கு இப்போது மீட்டெடுக்கப்பட்டுவிட்டது. உங்கள் அக்கறைக்கும் அன்பான ஆதரவிற்கும் நன்றி. மாநில சைபர் கிரைம் பிரிவு, ட்விட்டர் அதிகாரிகள் மற்றும் அனைத்து தொழில்நுட்ப நிபுணர்களுக்கும் மிக்க நன்றி.” என்று பதிவிட்டுள்ளார்.
Dear All, My Twitter account is now recovered and restored. Thanks for your concern and kind support. Many thanks to the state cyber crime wing, twitter officials and all other Technical Brains.