ஓணம் பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் 8 ஆம் தேதி கன்னியாக்குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கேரள மக்கள் மற்றும் மலையாள மொழி பேசுகின்ற தென் தமிழக மக்கள் அனைவரும் கொண்டாடும் பாரம்பரிய பண்டிகை தான் ஓணம். இது பத்து நாட்கள் வண்ண பூக்களை கொண்டு வெகு விமர்சையாக கொண்டாடப்படுகின்ற பண்டிகை.
அந்த வகையில் இந்த வருடம் ஓணம் பண்டிகை ஆகஸ்ட் 30ஆம் தேதி துவங்கி, வரும் செப்டம்பர் எட்டாம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த ஓனம் பண்டிகையில் தமிழகத்தில் இருந்து கலந்து கொள்ள நிறைய மக்கள் செல்லும் காரணத்தால் அதற்கு ஏற்றவாறு அரசு சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்துள்ளது.
இத்தகைய நிலையில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் 8 ஆம் தேதி கன்னியாக்குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அத்துடன், இதற்கு பதிலாக செப்டம்பர் 10-ம் தேதி வழக்கம் போல அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்கள் இயங்கும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, நீலகிரி, கோவை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.