கடன் வழங்கும் சீன செயலிகள் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை சோதனையில் அந்த நிறுவனங்களின் வங்கிக்கணக்குகளில் இருந்த ரூ.17 கோடி முடக்கம்

கடன் வழங்கும் சீன செயலிகள் தொடர்பான வழக்கில், பெங்களூரில் உள்ள 6 இடங்களில் அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனையில், அந்நிறுவனங்களுக்கு சொந்தமான வங்கிக்கணக்குகளில் இருந்த 17 கோடி ரூபாய் முடக்கப்பட்டது.

சீன செயலிகளின் சட்டவிரோத பணபரிவர்த்தனை தொடர்பாக பெங்களூரு சைபர் கிரைம் போலீசார் பதிந்த 18 வழக்குகளின் கீழ், சீனர்களால் நடத்தப்படும் நிறுவனங்களிலும் மற்றும் Razorpay Pvt Ltd, Cashfree Payments, Paytm Payment Services Ltd உள்ளிட்ட நிறுவனங்களிலும்,அமலாக்கத்துறையினர் நேற்று சோதனை நடத்தினர்.

மேலும், சீன நிறுவனங்கள் இந்தியர்களின் போலி ஆவணங்களை தயாரித்து, அவர்களை அந்த நிறுவனங்களின் போலி இயக்குனர்களாக நியமித்து, குற்றச்செயல்களில் பெரும் வருமானத்தை ஈட்டியது தெரிய வந்துள்ளது.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.