
கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற யுவன் சங்கர் ராஜா
1997ம் ஆண்டு சரத்குமார் நடித்த அரவிந்தன் என்ற படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் யுவன் சங்கர் ராஜா. தனது 16 வயதில் இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜாவுக்கு தற்போது 42 வயது ஆகிறது. இந்த 25 ஆண்டுகளில் அவர் இதுவரை 150 படங்களுக்கு மேல் இசை அமைத்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழி படங்களுக்கு இசையமைத்து தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கிறார். இந்நிலையில் திரைத்துறையில் யுவன் சங்கர் ராஜாவின் பங்களிப்பை பாராட்டி அவருக்கு சத்தியபாமா பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி இருக்கிறது. 16 வயதிலேயே சினிமாவுக்குள் நுழைந்த யுவன் சங்கர் ராஜா, 25 ஆண்டுகளில் 150 க்கும் அதிகமான படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். அவரது பங்களிப்பை பாராட்டி இந்த டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.