வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே நேரிட்ட கார் விபத்தில் சிக்கி, டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி உயிரிழந்தார்.
இன்று(செப்., 04) மாலை 3:15 மணியளவில் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து மும்பை திரும்பிய சைரஸ் மிஸ்திரி, காரில் சென்று கொண்டிருந்தார். அவருடன் மேலும் 3 பேர் சென்றனர். பல்ஹர் பகுதியில் பாலத்தில் கார் சென்று கொண்டிருந்த போது நடந்த விபத்தில் சைரஸ் மிஸ்திரி உள்ளிட்ட 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நடந்தது சாலை விபத்து தான் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2012ம் ஆண்டு டாடா குழுமத் தலைவராக நியமிக்கப்பட் சைரஸ் மிஸ்திரி 2016ல் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
பிரதமர் இரங்கல்
பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட இரங்கல் செய்தி: சைரஸ் மிஸ்திரியின் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. அவர் இந்தியாவின் பொருளாதார வலிமையை நம்பிய ஒரு நம்பிக்கைக்குரிய தொழிலதிபராக இருந்தார். அவரது மறைவு தொழில்துறைக்கு மிகப்பெரிய இழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் அனுதாபங்கள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் பிரதமர் கூறியுள்ளார்.
சைரஸ் மிஸ்திரி மறைவுக்கு மத்திய அமைச்சர்கள், மஹாராஷ்டிர மாநில முதல்வர் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement