செம்பை சங்கீத உற்சவம் கோலாகல துவக்கம்!| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

பாலக்காடு: செம்பை வைத்தியநாத பாகவதரின், 126வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, இரு நாள் சங்கீத உற்சவம் நேற்று கோலாகலமாக துவங்கியது.

பாலக்காடு, செம்பை வித்யா பீடத்தில் நடந்த விழாவை கேரள கலாமண்டலம் பதிவாளர் ராஜேஷ்குமார் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். வழக்கறிஞர் நரேந்திர மேனன் தலைமை வகிக்க, மிருதங்க வித்வான் குழல்மன்னம் ராமகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார். செம்பை வித்யா பீடம் தலைவர் செம்பை சுரேஷ், செயலாளர் கீழத்துார் முருகன், ஓய்வு பெற்ற பேராசிரியர் கோபகுமார், குழல்மன்னம் வட்டார பஞ்சாயத்து தலைவர் தேவதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

latest tamil news

தொடர்ந்து, சுகுமாரி நரேந்திர மேனன் குழுவினரின் இசைக் கச்சேரி நடந்தது. வயலின் வித்வான் ஒத்தப்பாலம் ஜெயதேவன், மிருதங்க வித்வான் ஆலுவா கோபாலகிருஷ்ணன், முகர்சங்கில் வித்வான் வெள்ளிநேழி ரமேஷ் ஆகியோரின் இசை கச்சேரி அனைவரையும் கவர்ந்தது. இன்று காலை, 8:30 மணிக்கு செம்பை வித்யா பீடம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் சங்கீத ஆராதனை நடக்கிறது.

காலை, 11:30க்கு, செம்பை வித்யா பீடத்தின், 37வது மாநாட்டை கேரள சட்டசபை சபாநாயகர் ராஜேஷ் துவக்கி வைக்கிறார். எம்.எல்.ஏ., சுமோத் தலைமையில், ‘பிரவாசி பாரதிய சம்மான்’ விருதுக்கு தகுதி பெற்ற தொழிலதிபர் சித்திக் அஹமது கவுரவிக்கப்படுகிறார். தொடர்ந்து, மண்ணுார் ராஜகுமாரன் உண்ணி குழுவினரின் இசைக் கச்சேரி நடக்கிறது. இரு நாட்கள் நடக்கும் சங்கீத உற்சவத்தில், 120க்கும் மேற்பட்ட இளம் இசைக் கலைஞர்கள் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.