டாடா சன்ஸ் குழும முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி கார் விபத்தில் உயிரிழப்பு..! – தலைவர்கள் இரங்கல்..!

டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள்தலைவர்சைரஸ் மிஸ்திரி கார் விபத்தில் இன்று உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று மதியம் மகாராஷ்ட்ராவில் நிகழ்ந்துள்ளது. அவரின் வாகனத்தில் மொத்தம் 4 பேர் இருந்துள்ளனர். அதில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என்று காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகமதாபாத்திலிருந்து மும்பை செல்லும் வழியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. சைரஸ் மிஸ்திரி இறப்பிற்கு பல்வேறு தலைவர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.