டெல்லி: டெல்லியில் ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரஸ் நடத்தும் போராட்டத்தில் கலந்துகொள்ள வருகை தந்த தொண்டர்களை போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. விலைவாசி உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் மீதான ஜிஎஸ்டி வரிவிதிப்பு, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றை எதிர்த்து டெல்லியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் ராஜீவகாந்தி உட்பட மூத்த தலைவர்கள் கலந்துகொண்டு பேசுகிறார்கள்.
டெல்லி, ஹரியானா, உத்திரபிரதேசம் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து காங்கிரஸ் தொண்டர்கள் வருகை தந்துள்ளனர். இவ்வாறு வருகை தந்த காங்கிரஸ் கட்சியினர் குறிப்பிட்ட இடத்தில் திரள போலீசாரால் அனுமதி மறுக்கப்பட்டது.
அப்போது போலீசாருக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனிடையே அத்தியாவசிய பொருட்களின் மீதான ஜிஎஸ்டி வரிவிதிப்பு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். உணவு பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி போட்டால் மக்கள் பசியில் வாடவேண்டிய நிலை ஏற்படும் என அவர்கள் தெரிவித்தனர்.