நடிகையின் நாய்க்கு தனி இன்ஸ்டாகிராம்..அதற்கு 40,000 ஃபாலோயர்ஸ்..இந்த கொடுமை நம்ம நாட்லதான் நடக்கும்!

சென்னை : நடிகை கீர்த்தி சுரேஷ் தனது செல்ல பிராணி நைக்கியின் பிறந்தநாளை கொண்டாடி அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தெலுங்கில் மகாநடி என்றும் தமிழில் நடிகையர் திலகம் என்று வெளியான படத்திற்காக இந்திய அரசின் உயரிய விருதான தேசிய விருதை பெற்றார்.

இவர் கடைசியாக மரக்காயர், அண்ணாத்த, சர்காரு வாரி பட்டா, சாணிகாயிதம், வாஷி படங்களில் நடித்துள்ளார்.

இதுதான் ஸ்டைலோ

ஹீரோயினாகிவிட்டால் சம்பளம் உயருகிறதோ இல்லையோ.. தனக்குனு ஒரு சொல்ல நாயை வாங்கிவைத்துக்கொண்டு, அதை கொஞ்சுவது, அதற்கு முத்தம் கொடுப்பது, ஓடி பிடித்து விளையாடுவது என ஹீரோயின்கள் கொடுக்கும் அலப்பாறை தாங்க முடியல. ஒருவேளை ஹீரோயினா ஆயிட்டா நாய் வளர்க்க வேண்டும் என்பது தான் இந்த காலத்து ஸ்டைல் போல நாம என்னத்த கண்டோம்.

கொடுத்துவைத்த நாய்

கொடுத்துவைத்த நாய்

அந்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷ், சிட்ஷு வகை நாய்க்குட்டி ஒன்றை செல்லப்பிராணியாக வளர்த்து வருகிறார். அந்த செல்லத்துக்கு நைக்கி என பெயர்வைத்து நித்தம் நித்தம் அதை கொஞ்சி வருகிறார். போதாத குறைக்கு அந்த போட்டோவை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து வருகிறார். இதைப்பார்த்த இளசுகள் ஹூம் கொடுத்துவைத்த நாய் என ஏக்க பெருமூச்சு விட்டு வருகின்றனர்.

நாய்க்கு தனி இன்ஸ்டாகிராம்

நாய்க்கு தனி இன்ஸ்டாகிராம்

இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் தனது செல்ல நாய்குட்டியின் பிறந்தநாளை கொண்டாடி உள்ளார். மேலும்,செல்லப்பிராணியுடன் வளைத்து வளைத்து எடுத்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது மட்டும் இல்லாமல் தனது செல்ல பிராணி நைக்கியின் பெயரில் தனி இன்ஸ்டாகிராம் கணக்கையும் வைத்து இருக்கிறார். அந்த கணக்கையும் 40 ஆயிரம் பேர் ஃபாலோ செய்து வருகின்றனர்.

நம்ம நாட்லதான் நடக்கும்

நம்ம நாட்லதான் நடக்கும்

ஃபாலோ செய்வது மட்டுமில்லாமல், நாய் குட்டியின் பிறந்த நாள் புகைப்படத்திற்கு மட்டும், 8 ஆயிரம் லைக், ஹேப்பி பர்த்டே நைக்கி என 230 கமெண்ட் வேற. நடிகை அக்கவுண்டை ஃபாலோ பண்றீங்க சரி, நாய் அக்கவுண்டையுமா? என்னடா இப்படி பண்ணி வச்சிருக்கீங்க, இந்த கொடுமை எல்லாம் நம்ம நாட்லதான் நடக்கும் என பல நெட்டிசன்ஸ் மனம் நொந்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.