நாய் மலம் கழித்ததை கண்டித்த பக்கத்து வீட்டுக்காரர்.. துப்பாக்கியால் சுட்ட அண்டை வீட்டார்!

வீட்டின் முன் நாய் மலம் கழித்தத்தை தட்டிக்கேட்க சென்ற பக்கத்து வீட்டுக்காரரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பஞ்சாப்பின் லூதியானா பகுதியில் நடந்திருக்கிறது.
செக்டார் 32-A பகுதியில் கடந்த வியாழக்கிழமையன்று இரவு 10 மணியளவில் ரமன் கபூர் என்பவரும் அவரது தந்தையும் வாக்கிங் சென்றிருக்கிறார்கள். அதே சமயத்தில் விஜய் கம்பீர் என்ற பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் தனது மனைவியுடனும், வளர்ப்பு நாயுடன் வாக்கிங் சென்றிருக்கிறார். அப்போது ரமன் கபூரின் வீட்டு முன்பு விஜய் கம்பீரின் நாய் மலம் கழித்திருக்கிறது.
இதனைக் கண்ட ரமன் கபூரின் தந்தை விஜய் கம்பீரிடம் தட்டிக் கேட்டிருக்கிறார். ஆனால் விஜய்யோ ரமன் கபூரின் தந்தையை தரகுறைவாக பேசியிருக்கிறார். இந்த பேச்சு சூடிபிடிக்கவே அங்கு சென்று இருவரையும் தடுத்திருக்கிறார் ரமன் கபூர். ஆனால் அந்த இடத்தை விட்டு புறப்படுகையில் அந்த விஜய் கம்பீர் தன்னுடைய மகன் உங்களை சும்மா விட மாட்டார் என மிரட்டிவிட்டு சென்றிருக்கிறார்.

#Punjab के #ludhiana में कुत्ते को शौच करवाने को लेकर चलीं गोलियां। पड़ोसियों में ही विवाद हुआ। विजय नाम का सख्श पड़ोसी सोमनाथ के घर बाहर कुत्ता लेकर आता था। सोमनाथ ने विरोध किया तो विजय के बेटे ने 2 फायर किए। ‘हद ही हो गई लोगों की भी’ pic.twitter.com/WG7SISaDMo
— Harpinder Singh (@HarpinderTohra) September 2, 2022

இப்படி இருக்கையில் மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 8.30 மணியளவில் விஜய் கம்பீரின் மகனான சித்தார்த் கம்பீரும் அவருடைய கூட்டாளிகள் நால்வரும் ரமன் கபூரின் வீட்டுக்கு வந்து ஜன்னல்களை உடைத்து காரசாரமாக விவாதித்திருக்கிறார்கள்.
அப்போது சித்தார்த் கம்பீர் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் வானை நோக்கி சுட்டிருக்கிறார். அப்போது ரமன் கபூரை தாக்கவும் முயற்சித்த சமயத்தில் மீண்டும் வேறொங்கோ பார்த்து துப்பாக்கியால் சுட்டுவிட்டு அவ்விடத்தை விட்டு பறந்திருக்கிறார்கள்.
இதனையடுத்து இந்த சம்பவம் அனைத்தையும் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதோடு, போலீசிடம் புகார் தெரிவித்திருக்கிறார்கள். அதன் பிறகு துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட சித்தார்த் கம்பீர் மீது போலீசார் FIR பதிவிட்டு விசாரித்து வருகிறார்கள்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.