1,265 பேரை பலிகொண்ட பாரிய வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ‘மகத்தான மனிதாபிமான பதிலளிப்பு’ வேண்டும் என்று பாகிஸ்தான் சர்வதேச சமூகத்திடம் கேட்டுக் கொண்டுள்ளது.
பருவமழையால் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 33 மில்லியன் மக்களுக்கு உதவுமாறு மகத்தான மனிதாபிமான நடவடிக்கைக்கு அந்நாட்டு திட்டமிடல் அமைச்சர் அஹ்சன் இக்பால் சர்வதேசத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். நிவாரண உதவிகள் தொடர்பாக அமைச்சர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
மழை மற்றும் வெள்ளத்தின் காரணமாக சுமார் 10 பில்லியன் அமெரிக்க டேரலர் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக பாகிஸ்தான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.