போதை பார்ட்டியில் பங்கேற்ற 100 பேரிடம் விசாரணை: பெங்களூரு விடுதியில் பரபரப்பு

பெங்களூரு: பெங்களூருவில் உள்ள ஓட்டலின் விடுதியில் குறிப்பிட்ட நேரத்தை தாண்டி போதை பார்ட்டி நடந்ததை அடுத்து, அதில் பங்கேற்ற 100 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கர்நாடகா மாநிலம் பெங்கரூரு நகரின் ஜீவன் பீமாநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓட்டலின் விடுதியில் இன்று அதிகாலை 3 மணி வரை பார்ட்டி நடந்து கொண்டிருந்தது.

 தகவலறிந்த போலீஸ் ஏசிபி ரீனா தலைமையிலான குழுவினர், அந்த விடுதிக்குள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். போதை விருந்தில் பங்கேற்ற 100 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் பார்ட்டியில் பயன்படுத்திய பணம் மற்றும் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஓட்டல் மற்றும் பார்ட்டி ஏற்பாட்டாளர்கள் மீது ஜீவன் பீமநகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.