மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே ஏற்பட்ட கார் விபத்தில் சிக்கி, டாடா குழுமத்தியின் தலைவர் சைரஸ் மிஸ்திரி உயிரிழந்தார்.
இன்று மாலை குஜராத் மாநிலத்தில் இருந்து மும்பை திரும்பிய சைரஸ் மிஸ்திரி, 4 பேருடன் காரில் பயணித்து கொண்டிருப்ந்த போது, பல்ஹர் பகுதியில் இருந்த பாலத்தின் மீது கார் பயங்கர விபத்துகுள்ளாகியது.
இந்த விபத்தில் சம்பவம் இடத்திலேயே சைரஸ் மிஸ்திரி உள்பட இருவர் இருவர் பலியாகினர். இருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது விபத்து என்றாலும் இது குறித்து தீவிர விசாரணைகு முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்படுள்ளது.
டாடா சன்ஸின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி விபத்தில் உயிரிழப்பு.. !
யார் இந்த சைரஸ் மிஸ்திரி?
சைரஸ் மிஸ்திரி 2012ம் ஆண்டு டாடா சன்ஸ் தலைவராக நியமிக்கப்பட்ட நிலையில், 2016ம் ஆண்டு வரையில் அப்பதவியில் தொடர்ந்தார். டாடாவின் குடும்ப வாரிசு அல்லாத இரண்டாவது நபர் என்பது குறிப்பிடத்தக்கது.
2016-ம் ஆண்டு டாடா குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தில் இருந்து தானாக ராஜினாமா செய்வதற்கான வாய்ப்பு மிஸ்திரிக்கு வழங்கப்பட்டது. எனினும் மிஸ்திரி பதவியில் இருந்து விலகாத நிலையில், வாக்கு மூலம் நீக்கப்பட்டார்.
குடும்ப பின்னணி
சைரஸ் மிஸ்திரி மும்பையில் பார்சி குடும்பத்தில் பிறந்தவர். இவர் இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபரும், கட்டுமான அதிபருமான பல்லோன்ஜி மிஸ்திரியின் இளைய மகன் ஆவார். அவரது பெற்றோர் இருவரும் ஜோராஸ்ட்ரிய மதத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார். இருப்பினும் சைரஸ் மிஸ்திரியின் தாயார் அயர்லாந்தில் பிறந்தவர். இவரிடம் அயர்லாந்து குடியுரிமையும் உள்ளது.
டாடா டூ மிஸ்திரி எப்படி?
மிஸ்திரியின் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். மிஸ்திரி 1991 இல் குடும்பக் கட்டுமான நிறுவனமான ஷபூர்ஜி பல்லோன்ஜி & கோ.லிமிடெட் நிறுவனத்தில் இயக்குநராக சேர்ந்தார். ஷாபூர்ஜி பல்லோன்ஜி குழுமத்தின் ஒரு பகுதியாக இருக்கும் ஷபூர்ஜி பல்லோன்ஜி & கம்பெனியின் நிர்வாக இயக்குநராகவும், டாடா சன்ஸ் மற்றும் டாடா குழுமத்தின் தலைவராகவும் மிஸ்திரி இருந்து வந்தார். மிஸ்திரியின் தாத்தா 1930களில் டாடா சன்ஸ் நிறுவனத்தின் பங்கினை வாங்கியினார். இது தற்போது மிஸ்திரியின் வசம் 18.5% உள்ளது.
கல்வி தகுதி
சைரஸ் மிஸ்திரி மும்பையில் உள்ள புகழ்பெற்ற கதீட்ரல் & ஜான் கானான் பள்ளியில் படித்தவர். பிறகு அவர் லண்டன் இம்பீரியல் கல்லூரியில் படித்தார். 1990ல் லண்டன் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றவர், அதன் பின்னர் லண்டன் பிசினஸ் ஸ்கூலில் பயின்றார். 1996ல் லண்டன் பல்கலைக்கழகத்தில் நிர்வாகத்தில் சர்வதேச நிர்வாக முதுநிலை பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சைரஸ் மிஸ்திரி சொத்து மதிப்பு :
2018ல், மிஸ்திரியின் நிகர மதிப்பு தோராயமாக $10 பில்லியன் ஆகும். ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ் படி, சைரஸ் மிஸ்திரியின் தந்தை பல்லோன்ஜி மிஸ்திரியின் சொத்து 2021ம் ஆண்டில் 30 பில்லியன் டாலராக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அவர் இறக்கும் போது US$29 பில்லியன் சொத்து இருந்தது.
who is cyrus mistry?What is relation between Tata and Mistry?
who is cyrus mistry?What is relation between Tata and Mistry?/யார் இந்த சைரஸ் மிஸ்திரி.. டாடா குழுமத்திற்கு, இவருக்கும் என்ன சம்பந்தம்..!