ரஜினியிடம் ‘எல்லாத்தையும் நிறுத்தச்சொல்லி’ மிரட்டிய அரவிந்த்சாமி… ‘தலைவர் 170’ ல் இணைகிறார்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து டான் படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினியின் 170 வது படமான இதற்கு ‘தலைவர் 170’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் ரஜினியுடன் அரவிந்த்சாமி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

1991 ம் ஆண்டு வெளியான தளபதி படத்தில் சூர்யா – தேவாவாக அனைவரையும் மிரட்டிய ரஜினிகாந்த் – மம்மூட்டி இருவரையும் ‘எல்லாத்தையும் நிறுத்தச்சொல்லி’ மிரட்டிய அரவிந்த்சாமியின் நடிப்பு அவர்கள் இருவருக்கும் இணையாக பேசப்பட்டது.

இந்தப் படத்திற்குப் பிறகு தற்போது 30 ஆண்டுகள் கழித்து தலைவர் 170 படத்தில் ரஜினி – அரவிந்த்சாமி இணைந்து நடிக்கவுள்ளனர்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.