ரயிலில் பாய்ந்து வாலிபர் சாவு?

தாம்பரம்: பல்லாவரம் – திரிசூலம் ரயில் நிலையங்கள் இடையே  30 வயது மதிக்கத்தக்க வாலிபர் சடலம் கிடப்பதாக தாம்பரம் ரயில்வே போலீசாருக்கு தகவல் நேற்று கிடைத்தது. அதன்படி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தண்டவாளம் அருகே உடல் சிதறிய நிலையில் கிடந்த வாலிபர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது, ரயில் அடிப்பட்டு இறந்து கிடந்தது புதுச்சேரி பகுதியை சேர்ந்த அஸ்வின் சக்கரவர்த்தி (30) என்பதும், கடன் தொல்லையால் வீட்டைவிட்டு வெளியேறி சென்னையில் தங்கியிருந்ததும் தெரியவந்தது. ஆனால் என்ன வேலை செய்தார் என்பது தெரியவில்லை. மேலும் காரைக்கால் காவல்நிலையத்தில் அஸ்வின் சக்கரவர்த்தி காணவில்லை என புகார் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.