ரஷ்யாவில் தொடர்ந்து 2வது நாளாக 50,000க்கும் மேற்பட்ட புதிய கொரோனாதொற்று பதிப்புகள் பதிவாகியுள்ளன. இது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து இரண்டாவது நாளாக, ரஷ்யாவில் 50,000 க்கும் மேற்பட்ட புதிய கொரோனாதொற்று பாதிப்புக்கள் பதிவாகியுள்ளன. மற்றும் 51,699 சோதனைகள் பாசிட்டிவ் ஆக வந்துள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 92 கொரோனா வைரஸ் தொடர்பான இறப்புகள் பதிவாகியுள்ளன என்று கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்குழு தெரிவித்துள்ளது. ரஷ்யாவில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று சுமார் 50,952 புதிய கொரோனா தொற்று பாதிப்புக்கள் பதிவுசெய்தது, கிட்டத்தட்ட ஆறு மாதங்களில் முதல் முறையாக 50,000 ஐ தாண்டியுள்ளதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவில் ஏற்பட்டிருக்கும் இந்த கொரோனா பாதிப்பு ரஷ்யாவில் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.