சக்தி செளந்தர் ராஜன் கடந்த 2010ஆம் ஆண்டு பிரசன்னா நடிப்பில் வெளியான நாணயம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படம் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து சிபிராஜ் நடித்த நாய்கள் ஜாக்கிரதை படத்தை இயக்கிய அவர், அப்படத்தில் நாய்க்கும் மனிதனுக்கும் இடையேயான அன்பை நேர்த்தியாக கூறப்பட்டிருந்ததால் படமும் நல்ல வெற்றி பெற்றது. இதனால் சக்தி சௌந்தர்ராஜன் மீது பலருக்கும் எதிர்பார்ப்பு எகிறியது. அந்த சூழலில் ஜெயம் ரவியை வைத்து மிருதன் என்கிற ஜாம்பி படத்தை இயக்கினார். தமிழில் வெளியான முதல் ஜாம்பி படம் இதுவென்றாலும் ரசிகர்களிடம் போதிய வரவேற்பை பெறவில்லை. அதேபோல் விண்வெளியை மையமாக வைத்து இயக்கிய டிக் டிக் டிக் படமும் தோல்வியடைந்தது.
அதனைத் தொடர்ந்து ஆர்யாவுடன் இணைந்த சக்தி சௌந்தர்ராஜன் டெடி படத்தை இயக்கினார். தற்போது மீண்டும் ஆர்யாவுடன் கைகோர்த்திருக்கும் சக்தி தற்போது கேப்டன் என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஹரீஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம், நடிகர் ஆர்யாவின் தி ஷோ பீப்புள் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருக்கும்”கேப்டன்” திரைப்படம் செப்டம்பர் 8ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதன் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. படம் வெளியாக இன்னும் 4 நாள்களே இருப்பதால் படத்துக்கான ப்ரோமோஷன் பணிகளுக்கென்று ஆர்யா பல ஊர்களுக்கு சென்றுவருகிறார்.
அந்தவகையில், கோவையில் உள்ள தியேட்டரில் ரசிகர்களுடன் கேப்டன் படத்தின் ட்ரெய்லரை ரசித்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எனக்கு ஸ்பெஷல் திரைப்படம் என்றால் அது ராஜா ராணி தான். அந்த படத்திற்கு தமிழ்நாடு அரசு விருது வழங்கியுள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதேபோன்று வித்தியாசமான முறையில் தற்போது கேப்டன் படத்தை எடுத்துள்ளோம். அனைவரும் திரையரங்குக்கு வந்து திரைப்படத்தை காண வேண்டும்.
Here’s the #CaptainTrailer Hope you all like it https://t.co/Nm8z9fjTN1@ShaktiRajan @SimranbaggaOffc #AishwaryaLekshmi @immancomposer @madhankarky @tkishore555 @ThinkStudiosInd @RedGiantMovies_ @Udhaystalin @thinkmusicindia @ZEE5Tamil @DoneChannel1
— Arya (@arya_offl) August 22, 2022
இந்த திரைப்படம்,ராணுவத்தை மையமாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு ஹாலிவுட் படம் போல் இருக்கும். பொதுமக்களுக்கு நல்ல கதைகள் பிடிக்கிறது. நல்ல கதைகளை விரும்பி பார்க்கின்றனர்” என்றார்.