லண்டனில் சொந்தமா வீடு வாங்கல.. அது வாடகை வீடு தான்.. ட்ரோல் செய்தவர்களை விளாசிய குஷ்பு!

சென்னை: நடிகை குஷ்பு லண்டனில் புதிய வீட்டில் டீ குடிக்கிறேன் என நேற்று ட்வீட் போட்டு பரபரப்பை கிளப்பினார்.

அதற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர். ஆனால், சிலர் லண்டனில் வீடு வாங்கும் அளவுக்கு எப்படி காசு வந்தது என குஷ்புவை விமர்சித்த நிலையில், தற்போது கோபத்துடன் அவர் போட்டுள்ள ட்வீட் ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.

பாஜக கட்சியில் இணைந்து செயலாற்றி வரும் நடிகை குஷ்புவுக்கு அரசியல் ரீதியாக ஏகப்பட்ட விமர்சனங்கள் குவிந்த நிலையில் தான் அவர் இப்படி டென்ஷனாகி கெட்ட வார்த்தைகளை போட்டு கமெண்ட் செய்துள்ளார்.

லண்டனில் குஷ்பு

நடிகை குஷ்பு சமீப காலமாக லண்டனில் வசித்து வருகிறார். அங்கே உள்ள IKEA ஷாப்பிங் மாலுக்கு சென்ற போட்டோக்களையும் தனது புதிய வீட்டில் டீ குடிக்கிறேன் என்றும் அவர் போட்டோக்களை பதிவிட ஏகப்பட்ட ரசிகர்கள் நடிகை குஷ்புவை வாழ்த்தினர். லண்டனில் இருக்கும் சில ரசிகர்கள் தங்கள் வீட்டுக்கு வருமாறு அழைப்புகளையும் விடுத்தனர்.

புதிய வீடு

புதிய வீடு

நடிகை குஷ்பு தனது போட்டோக்களை ஷேர் செய்து புதிய வீட்டில் இருந்து போஸ்ட் போட்ட நிலையில், லண்டனில் புதிய வீட்டை வாங்கி விட்டார் நடிகை குஷ்பு என வாழ்த்துக்களுடன் சேர்ந்து சில பொறாமை பிடித்தவர்கள் ட்ரோல்களையும் போட்டு கழுவி ஊற்ற ஆரம்பித்தனர். பாஜக கட்சியில் செயல்பட்டு வரும் குஷ்புவுக்கு ஏகப்பட்ட அரசியல் ரீதியான எதிர்ப்புகளும் கிளம்பிய நிலையில், ஆத்திரமடைந்துள்ளார்.

அது வாடகை வீடு

அது வாடகை வீடு

புதிய வீடு தான்னு சொன்னேன், புதுசா சொந்தமா வாங்குன வீடுன்னா சொன்னேன். சில கயவர்கள் தவறான கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர் என கெட்டவார்த்தைகளில் திட்டித் தீர்த்துள்ளார் நடிகை குஷ்பு. புலம்புவர்கள் புலம்பட்டும் நான் புதுசா வாடகை எடுத்துள்ள வீட்டில் ஹேப்பியா இருக்க போறேன் என பதிலடி கொடுத்துள்ளார்.

குஷ்புவுக்கு ஆதரவு

குஷ்புவுக்கு ஆதரவு

ட்ரோல் பண்றவங்களை விட்டுத் தள்ளுங்க மேடம், நாங்க உங்க கூட இருக்கோம்.. லண்டனை என்ஜாய் பண்ணுங்க பேசுறவன் ஆயிரம் பேசிட்டுத் தான் இருப்பான் என நடிகை குஷ்புவுக்கு அவரது ரசிகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அரசியல் ரீதியான சண்டைகளும் நடிகை குஷ்புவின் ஆவேச ட்வீட்டுக்கு கீழ் கிளம்பி உள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.