வால்மார்ட் கட்டடத்திற்கு மிரட்டல்: விமானத்தை திருடி ஆட்டம் காட்டிய விமானி கைது!

9 இருக்கைகள் கொண்ட சிறிய ரக விமானத்தை திருடிய விமானியை போலீசார் கைது செய்தனர்.

அமெரிக்காவின் மிஸ்ஸிப்பி மாகாணம் டுபேலா நகரில், பிரபல சில்லறை வர்த்தக நிறுவனமான வால்மார்ட் பல்பொருள் அங்காடி செயல்பட்டு வருகிறது. இந்த வால்மார்ட் அங்காடியை விமானம் மூலம் தகர்க்கப் போவதாக, விமானி ஒருவர் மிரட்டல் விடுத்தார். இந்த விவகாரம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மிரட்டல் விடுத்தபடி விமானத்தில் சுமார் 3 மணி நேரம் 29 வயதான விமானி சுற்றி வந்தார். இந்த நபருடன் டுபேலா நகர போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஒருபக்கம், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வால்மார்ட் அங்காடியில் இருந்து வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர்.

மீண்டும் நிறுத்தப்பட்டது ஆர்டெமிஸ்-1 ராக்கெட் ஏவும் திட்டம்..! – எரிபொருள் கசிவு காரணமா..?

நிலைமை சீராகும் வரை வால்மார்ட் அங்காடியை சுற்றியுள்ள பகுதிகளுக்கு பொது மக்கள் செல்ல வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தி இருந்தனர்.

இந்த நிலையில், எரிபொருள் தீர்ந்ததால் விமானத்தை ஆபத்தான முறையில் விமானி தரையிறக்கினார். அவரை உடனடியாக மடக்கி பிடித்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எனினும், மிரட்டல் விடுத்த நபரை பற்றிய விவரம் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. முதல் கட்ட விசாரணையில், 9 இருக்கைகள் கொண்ட சிறிய ரக விமானத்தை விமானி திருடியது தெரிய வந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.