திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே நடந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஆவடி போலீஸ் ஏட்டு பரிதாபமாக உயிரிழந்தார். திருவள்ளூர் மாவட்டம் பாண்டுர் கிராமத்தை சேர்ந்தவர் அன்புச் செல்வன். இவர் ஆவடி காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றினார். இவர் கடந்த 31ம் தேதி பணியை முடித்துவிட்டு பைக்கில் வீடு திரும்பினார். சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், திருவள்ளூர் கோட்டாட்சியர் அலுவலகம் எதிரில் அவர் வந்தபோது பின்பக்கமாக தாறுமாறாக ஓடிய கார், அவரது பைக் மீது மோதியது.
இதில் அன்புச் செல்வன் தலையில் படுகாயம் அடைந்து திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்றிரவு அன்புச்செல்வன் பரிதாபமாக இறந்தார்.இதுபற்றி திருவள்ளூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.