பிரிட்டீஷ் கோடீஸ்வரரான ஆலன் சுகர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீட்டிலிருந்து வேலை பார்ப்பவர்களை, கடுபேற்றும் விதமாக ஒரு ட்வீட்டினை பதிவு செய்துள்ளார்.
இது ட்விட்டரில் பெரும் கொந்தளிப்பினை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு பெரும் விவாதமாகவே மாறியுள்ளது.
இது வீட்டில் இருந்து வேலை பார்க்கும் ஊழியர்களை அசிங்கப்படுத்தும் விதமாக வந்துள்ளது. ஒர்க் ப்ரம் ஹோமில் இருக்கும் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியினை ஏற்படுத்தியுள்ளது.
இனி சென்னையில் இருந்து பெங்களூரு ஓட்டலில் உணவு வாங்கலாம்.. ஜோமேட்டோவின் புதிய அறிவிப்பு!
குறைவான சம்பளம்
பிரிட்டீஷ் கோடீஸ்வரரான ஆலன் சுகர், தனது சமீபத்தீய ட்வீட்டில் வீட்டில் இருந்து வேலை செய்பவர்கள் சோம்பேறிகள். அவர்களுக்கு அலுவலகம் சென்று வேலை பார்க்கும் ஊழியர்களை விட குறைவான சம்பளம் வழங்க வேண்டும் என பதிவு செய்துள்ளார்.
மானியம் வேண்டுமா?
75 வயதான தொழிலதிபரான ஆலன், குட்மார்னிங் பிரிட்டன் என்ற நிகழ்ச்சியில் நடந்த விவாதத்திற்கு பிறகு இப்படி ஒரு கருத்தினை தெரிவித்துள்ளார். இது குறித்து மான்செஸ்டர் ஈவ்னிங் என்ற செய்தியில், வீட்டில் இருந்து வேலை பார்ப்பதற்கு மானியம் வேண்டுமா? என்ற விவாதத்தின் மத்தியில் இத்தகைய கருத்துகள் வந்துள்ளது.
நிறுவனங்களுக்கு செலவு குறைவு?
தொழிலாளர்கள் அலுவலகத்திற்கு வராததால் நிறுவனங்கள் அதிக லாபம் பார்க்கின்றன. இதனால் ஊழியர்களுக்கு அதிக சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்பது GMB வாதமாகும். இது நிறுவனங்கள் பெரும் பணியிடங்களுக்கு அதிகரித்து வரும் கட்டணங்களுக்கு மத்தியில் வாடகை செலுத்த வேண்டும். ஆனால் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றுவதால் அப்படி தேவையில்லை.
ஊழியர்களுக்கு பயண செலவுகள் மிச்சம்
எனினும் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றுவதால் பயண செலவுகள் மிச்சம், அவர்களுக்கு குறைவான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பது ஆலனின் கருத்தாக உள்ளது.
மற்றொரு ட்வீட்டில், வீட்டில் இருந்து பணியாற்றும் ஊழியர்களை சோம்பேறிகள் என தெரிவித்துள்ளார். அவர்கள் வீட்டில் வேலை செய்வதற்கு பதிலாக கோல்ஃப் மற்றும் டென்னிஸ் பார்க்கிறார்கள் என்று கூறியுள்ளார். நாங்கள் வரி செலுத்துகிறோம். அவர்களை மீண்டும் அலுவலகத்திற்கு அழைத்துக் செல்லுங்கள். அல்லது பணி நீக்கம் செய்யுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
சம்பளத்தை குறைக்க கூடாது
இதனை மறுத்து வரும் ட்விட்டர் வாசிகள், ஊழியர்களின் திறனுக்கு ஏற்ப ஊதியம் வழங்கப்பட வேண்டும். அவர்களின் வேலையின் மதிப்பு என்ன? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். பயணம் இல்லை என்பதற்காக அவரின் சம்பளம் குறைக்கப்பட கூடாது என பதிவு செய்துள்ளனர்.
எனர்ஜி நுகர்வு?
மற்றொரு பயனர், அவர்கள் வீட்டில் இருக்கும்போது அவர்கள் பயன்படுத்தும் மின்சாரம் உள்ளிட்ட எனர்ஜி நுகர்வு பற்றி கேள்வி எழுப்பினார். வீட்டில் இருந்து பணி புரிந்து வருவதால் வாழ்க்கை செலவினங்கள் அதிகரித்து வருகின்றன. ஆக குறைந்த சம்பளம் வழங்க கூடாது என்றும் விவரித்துள்ளார்.
ஷாந்தணு தேஷ்பாண்டேவின் சர்ச்சை கருத்து
இந்த வாரத் தொடக்கத்தில் பாம்பே ஷேவிங் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஷாந்தணு தேஷ்பாண்டே, புதியதாக பணிக்கு வருபவர்களை ஒரு நாளைக்கு 18 மணி நேரம் பணிபுரிய வேண்டும் என்று கூறினார். இதுவே இணைத்தில் பெரும் விவாதமாக மாறியது.
British billionaire Alan Sugar says people who work from home are lazy
British billionaire Alan Sugar says people who work from home are lazy/வீட்டில் இருந்து பணி வேலை பார்த்தால் சோம்பேறியா.. பில்லியனிரின் சர்ச்சை கருத்து..!