சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வருகை தந்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பேசிய அவர், “தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கொலை கொள்ளை குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இது மிகுந்த வேதனை அளிக்கிறது. ஆனால், கொலை எண்ணிக்கையை காவல் துறை உயர் அதிகாரிகள் வெளியே குறைத்து சொல்கிறார்கள். அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே கொலை கொள்ளை குற்றங்களை குறைக்க முடியும்.
தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஒரு நபர் ஆணைய நீதிபதி அருணா ஜெகதீசன் தமிழக அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார். நான்கு மாதங்கள் ஆகியும் அறிக்கையை அரசு வெளியிடாத காரணத்தால் தற்போது கசிய விடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் காவல்துறை உயர் அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஆனால் அவர்கள் வேறு இடத்தில் பணி உயர்வு பெற்று பணியாற்றி வருகிறார். தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட்டால் போராட்டம் வெடிக்கும்” எனத் தெரிவித்தார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதிமுக ஆட்சியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு மிகப்பெரிய பதற்றத்தையும், சோகத்தையும் உருவாக்கியது. இதனைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டு கிடக்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEata