4000 அடி உயரம்.. வானில் இருந்து குதித்த டிக்டாக் பிரபலம்! விரியாத பாராசூட்டால் தரையில் விழுந்து பலி

ஒட்டாவா: கனடாவில் 21 வயது நிரம்பிய டிக்டாக் பிரபலமான கல்லூரி மாணவி சாகசம் செய்வதற்காக ‛ஸ்கைடைவிங்’ முறையில் வானில் 4000 அடி உயரத்தில் இருந்து கீழே குதித்தபோது பாராசூட் செயல்படாததால் தரையில் விழுந்து பரிதாபமாக பலியான அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

கனடாவை சேர்ந்தவர் தான்யா பர்டாஷி (வயது 21). இவர் டொரண்டா பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். இவர் 2017ல் நடைபெற்ற ‘மிஸ் டீன் கனடா’ அழகி போட்டியில் பங்கேற்றார். இந்த போட்டியில் ‛செமி பைனல்’ வரை அவர் சென்றார். இதன்மூலம் அவர் அதிகளவில் புகழ் பெற்றார்.

மேலும் டிக்டாக்கில் வீடியோக்கள் வெளியிட்டதால் அவர் இன்னும் பிரபலமடைந்தார். இவருக்கு சமூக வலைதளங்களில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

சாகசத்தில் ஆர்வம்

இந்நிலையில் தான்யா அவ்வப்போது சாகச சம்பவங்களை செய்து டிக்டாக், இன்ஸ்டா ஆகியவற்றில் பதிவிட்டு ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளார். சமீபகாலமாக அவர் ‛ஸ்கைடைவிங்’கில் ஆர்வம் கொண்டார். பயிற்சியாளருடன் சேர்ந்து அவர் பலமுறை ‛ஸ்கைடவிங்’ செய்து சாகசத்தில் ஈடுபட்டார். இதுதொடர்பான வீடியோக்களை அவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இதற்கு ரசிகர்கள் லைக்குகளை அள்ளி கொடுத்தனர்.

பிரத்யேக பயிற்சி

பிரத்யேக பயிற்சி

இதன் தொடர்ச்சியாக அவர் தனியாக ‛ஸ்கைடைவிங்’ சாகசம் செய்ய முடிவு செய்தார். இதற்கான பிரத்யேக பயிற்சியையும் அவர் மேற்கொண்டார். இந்த பயிற்சியை முடித்த அவர் தனியாக ‛ஸ்கைடைவிங்’ செய்ய உரிமம் பெற்றார். இதையடுத்து அவர் தனியாக ‛ஸ்கைடைவிங்’ செய்ய முடிவு செய்தார்.

4000 அடியில் சாகசம்

4000 அடியில் சாகசம்

அதன்படி விமானத்தில் இருந்து 4 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து தான்யா குதித்தார். வானில் மிதந்த நிலையில் அவர் குறிப்பிட்ட இடைவெளிக்கு பிறகு பாதுகாப்புக்காக தரையிறங்கும் வகையில் பாராசூட்டை பயன்படுத்த முயன்றார். ஆனால் பாராசூட் முழுமையாக விரிந்து செயல்படவில்லை. இதனால் தான்யா பார்டஷி அதிர்ச்சியடைந்தார்.

தரையில் விழுந்து பலத்த காயம்

தரையில் விழுந்து பலத்த காயம்

மேலும் அவர் தரையில் வந்து பொத்தென விழுந்தார். இதில் அவர் பலத்த காயமடைந்து மயங்கினார். இதையடுத்து அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்தனர். அப்போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர். இதையடுத்து தான்யா பார்டஷி உயிரிழந்ததை ‛ஸ்கைடைவிங்’ குழு உறுதி செய்தது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 நம்ப முடியவில்லை

நம்ப முடியவில்லை

இதுபற்றி தான்யா தோழி மெலோடி ஒல்கோலி கூறுகையில், ‛‛தான்யா எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார். வாழ்க்கையில் ஒவ்வொரு வினாடியையும் மகிழ்ச்சியாக வாழ நினைத்தார். அதன்படி மகிழ்ச்சியாக வாழ்ந்தார். தற்போது அவர் இறந்துள்ளதாக கூறும் சம்பவத்தை நம்ப முடியவில்லை. இது மிகவும் சோகமானது” என்றார்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.