Whatsapp scam :நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என்ற பாணியில் வாட்சப் வழியில் பணம் திருடும் கும்பல்

இணையவழி குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன தொடர்ந்து வாட்சப் மூலமாக மெசேஜ் ஒன்றை அனுப்பி அதன் வழியாக பணத்தை திருடும் கும்பல் தற்போது அதிகரித்துள்ளது

இந்நிலையில் தொடர்ந்து ஒரு கும்பல் திடீரென்று நாடு முழுவதும் உள்ள பலரின் மொபைலுக்கு வாட்சப் மெசேஜ் ஒன்றை அனுப்பி உள்ளனர். அந்த மெசேஜில் நீங்கள் கோன் பனேகா க்ரோர்பதி நிகழ்ச்சியில் 25 லட்சம் பரிசு தொகை வென்றுள்ளீர்கள் என்று உள்ளது.

அவர்கள் அனுப்பும் மெசேஜில் அம்பானி , பிரதமர் மோடி, அமிதாபச்சன் ஆகியோரின் படங்களை போட்டு ஜியோ மற்றும் கோன் பனேகா க்ரோர்பதி நிகழ்வின் படத்தையும் போட்டு அனுப்புவதால் மக்களும் இது உண்மை என்று நம்பி விடுகிறார்கள். அதனோடு சேர்த்து ஒரு பிளாங்க செக்கில் 25 லட்சம் பணத்தை அவர்கள் பெயரில் பதிவு செய்திருப்பது போல ஒரு போலியான போட்டோ ஒன்றையும் சேர்த்து அனுப்புகின்றனர்.

நேரடியாக ஒரு மொபைல் எண் மூலம் மெசேஜ் வாட்சப் வழியாக வருவதால் யாரோ ஒரு நபர் தான் அனுப்புகிறார்கள் என்று நம்பி பொதுமக்களும் திருப்பி அந்த நபருக்கு அழைப்பு விடுத்து பணத்தை இழந்து வருகிறார்கள். ராஜஸ்தான், பீகார், டெல்லி என பல்வேறு மாநிலங்களில் இது குறித்த புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி காவல் துறையும் இது சம்பந்தமான ஒரு வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.

கோன் பனேகா க்ரோர்பதி என்ற பெயரில் அமிதாப் பச்சன் ஒரு நிகழ்ச்சியை நடத்துவார். அதே நிகழ்ச்சியை நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என்று தமிழில் சூர்யா நடத்தியிருப்பார். அதில் முழுமையாக வெல்பவர்களுக்கு ஒரு கோடி வழங்கப்படும்.

அதே பாணியில் உங்களுக்கு 25 லட்சம் பணம் கிடைத்துள்ளது என்று மெசேஜ் அனுப்பி பயனர்களை ஏமாற்றி வருகிறார்கள் இந்த இணைய வழி திருடர்கள். அந்த மெசஜை நம்பி யாராவது அந்த எண்ணுக்கு அழைப்புக் கொடுத்தால் அவர்களிடம் முதலில் ஜிஎஸ்டி கட்ட வேண்டும் அதற்கு குறிப்பிட்ட தொகையை முன் பணமாக செலுத்தினால் உடனே உங்களுக்கு 25 லட்சம் வந்துவிடும் என்று கூறுகிறார்கள். பின்னர் சொன்ன தொகையை அந்த ஏமாற்றப்படும் நபர் கட்டியவுடன் அவர் ஏமாறும் வரை மீண்டும் மீண்டும் பரிசுத்தொகை 25 இலட்சத்திலிருந்து 45,75 என உயர்ந்துக் கொண்டே போவதாக கூறி மேலும் பணத்தை பிடுங்குவது‌. ஏமாற்றப்படுபவர் சுதாரித்து விட்டால் உடனே எண்ணை ப்ளாக் செய்துவிட்டு தொடர்பை துண்டிப்பது என இந்த திருடர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

இதிலிருந்து எப்படி தற்காத்துக் கொள்வது?

பொதுவாக வாட்சப் போன்ற தளங்கள் ஒரு நபருக்கும் மற்றும் நபருக்கும் இடையிலான பாதுகாக்கப்பட்ட எண்ட் டு எண்ட் மெசேஜ் மீடியம் என்பதால் அதில் குற்றவாளியை கண்டுபிடிப்பது அல்லது தடுப்பது சிரமம். ஆனால் பயனர்கள் தங்கள் மொபைலில் பதிவு செய்யாத அல்லது தங்களுக்கு தெரியாத எண்களிலிருந்து மெசேஜ் வந்தால் அவற்றை தவிர்த்து விடவும். போன் மூலமாக யாராவது பணம் கேட்டாலோ அல்லது உங்களின் ஏடிஎம் கார்டு , வங்கி எண் ஏடிஎம் அட்டை எண் விவரம் , சேமிப்பு சார்ந்த அல்லது பண பரிவர்த்தனை சார்ந்த கடவுச்சொல் அல்லது பதிவு எண்களை கேட்டால் கொடுக்காதீர்கள். உடனடியாக காவல்துறை அல்லது சைபர் பிரிவில் புகார் தெரிவிக்கவும்.

தேசிய சைபர் பிரிவு தொடர்பு எண் – 1930

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.