அடுத்தடுத்து கத்திக் குத்து, மரண ஓலம்… கனடாவில் யாரும் எதிர்பார்க்காத பெரும் அதிர்ச்சி!

கனடா நாட்டில் உள்ள சாஸ்கட்சேவன் மாகாணத்தில் பல்வேறு இடங்களில் திடீரென கத்துக்குத்து சம்பவங்கள் நடந்துள்ளன. குறிப்பாக ரஜினா நகரில் உள்ள ஜேம்ஸ் ஸ்மித் சீர் நேஷன், வெல்டன், சஸ்க்டன் ஆகிய இடங்களில் மர்ம நபர்கள் சிலர் புகுந்து சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளனர். யார் இவர்கள்? ஏன் இப்படி செய்கிறார்கள்? என்று யோசிக்கக் கூட நேரமில்லை.

அப்பகுதியில் இருந்தவர்கள் அனைவரும் அலறியடித்து தப்பியோடினர். இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவதற்குள் நிலைமை கைமீறிப் போனது. பல்வேறு இடங்களில் நடந்த கத்திக்குத்து சம்பவங்களில் 10 பேர் பலியாகினர். 15 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

பாகிஸ்தான் வெள்ளத்தால் பலி எண்ணிக்கை உயர்வு..!- தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அதிர்ச்சி தகவல்..!

இதுதொடர்பாக தீவிரமாக விசாரித்து வரும் கனடா போலீசார் இருவர் மீது சந்தேகத்தை எழுப்பியுள்ளனர். அவர்கள் டமியன் சண்டர்சன், மைலஸ் சண்டர்சன் ஆவர். இவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தை அடுத்து கனடா முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் நடந்த ரஜினா நகரில் கனடியன் கால்பந்து லீக் (ரக்பி) போட்டிகள் நடந்து வருகின்றன. இதனால் லீக் தொடர்ந்து நடத்தப்படுமா? இல்லை ஒத்திவைக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. சாஸ்கட்சேவன் மாகாணத்தில் நடந்த கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக கனடா அதிபர் ஜஸ்டின் ட்ருடியூ ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

எனக்கு வாய் நீளமா? சீறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம் நடந்திருக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். தற்போதைய நிலைமையை மிகவும் உன்னிப்பாக கவனித்து கொண்டிருக்கிறோம். உள்ளூர் அதிகாரிகள் தெரிவிக்கும் தகவல்களின் அடிப்படையில் அனைவரும் செயல்படுங்கள். தாக்குதல் சம்பவம் நடந்தவுடன் விரைவாக வந்து உதவி செய்தவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.