இதுதான் கலைஞர் ஸ்டைல்… ஸ்டாலின் சொன்ன ஆட்டுக்குட்டி கதை… செம வைரல்!

சென்னை பாரதி மகளிர் கல்லூரியில் இன்று (செப்டம்பர் 5) காலை நடந்த அரசு நிகழ்ச்சியில் ”புதுமைப் பெண்” திட்டத்தை முதல்வர்

தொடங்கி வைத்தார். பின்னர் மாணவிகள் மத்தியில் பேசும் போது, ஆட்டுக்குட்டி கதை ஒன்றை கூறி அசத்தினார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, மந்தைகளில் இருந்து ஆட்டை ஓட்டி வரும் நபர், ஒரேவொரு ஆட்டை மட்டும் தனது தோளில் போட்டுக் கொண்டு வருவார். அந்த ஆடு நடக்க முடியாததாக இருக்கும். இல்லையெனில் காலிலே காயம்பட்டதாக இருக்கும்.

அதுதான் சமூக நீதி என்று கலைஞர் அவர்கள் சொன்னார்கள். இவ்வாறு தோளில் போட்டுக் கொண்டு வருவது ஆட்டிற்கு காட்டும் சலுகை அல்ல. அது மேய்ப்பவரின் கடமை. இத்தகைய கடமை இருப்பதால் தான் இந்த அரசு பல நல்ல திட்டங்களை தீட்டி வருகிறது என்று கூறினார். ஏழ்மை நிலையில் இருக்கும் மாணவிகள் உயர்கல்வி கற்பதற்கு புதுமைப் பெண் திட்டமானது பெரிதும் உதவிகரமாக இருக்கும்.

இதனை அரசு தனது கடமையாக எண்ணி செய்து கொண்டிருக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். ஆனால் ஆட்டுக்குட்டி என்ற பெயரை குறிப்பிட்டு வேறு மாதிரியான அரசியல் கருத்துகளும் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன. மாணவிகள் மத்தியில் மேலும் பேசுகையில், பள்ளியுடன் படிப்பை நிறுத்தி விடும் பெண்ணிற்கு ஆயிரம் ரூபாய் கிடைப்பதால் தான் கல்லூரிக்குள் நுழைகிறார்கள்.

இதன்மூலம் தமிழகத்தின் கல்வி வளர்ச்சி அதிகமாகும். படித்தவர்கள் எண்ணிக்கை உயரும். அறிவுத்திறன் கூடும். திறமைசாலிகள் அதிகமாக உருவாகுவார்கள். பாலின சமத்துவம் ஏற்படும். குழந்தை திருமணங்கள் குறையும். பெண்கள் அதிகாரம் பெறுவார்கள். ஒவ்வொரு பெண்ணும் சொந்த காலில் நிற்பார்கள். எந்தவொரு கொடுமையையும் சகித்து கொண்டு அடங்கிப் போக வேண்டாம்.

இந்த ஆட்சியின் நோக்கம் என்பது எல்லோருக்கும் எல்லாம் என்பதே. கடந்த ஓராண்டில் பள்ளிக்கல்வித்துறை மகத்தான பல சாதனைகளை படைத்துள்ளது. இல்லம் தேடி கல்வி, நான் முதல்வர், பள்ளி மேலாண்மை குழுக்கள், பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிய செயலி, சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கு சிறப்பு நிதி, ஒன்று முதல் 3ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் இயக்கம், பயிற்சி தாள்களுடன் கூடிய பயிற்சி புத்தகங்கள்,

ஒன்பது முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வினாடி-வினா போட்டிகள், மாணவர் மனசு என்ற ஆலோசனை பெட்டி, ஒவ்வொரு பள்ளியிலும் நூலகம், கணினி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி, உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள், வகுப்பறை உற்றுநோக்கு செயலி, வெளிப்படையான ஆசிரியர் கலந்தாய்வு, முத்தமிழர் மொழிபெயர்ப்பு திட்டம், இளந்தளிர் இலக்கியத் திட்டம், வயது வந்தோருக்கான கற்போம் எழுதுவோம் திட்டம் என்று பட்டியலிட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.