இளம் வயது மேயர், எம்எல்ஏ திருமணம் கேரளாவில் நடந்தது

திருவனந்தபுரம்: இந்தியாவிலேயே  இளம் வயது மேயரான ஆர்யா ராஜேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  எம்எல்ஏ சச்சின் தேவ் ஆகியோரின் திருமணம் திருவனந்தபுரத்தில் நேற்று நடந்தது. கேரள தலைநகர் திருவனந்தபுரம் நகர மேயராக இருக்கும் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியை  சேர்ந்தவர் ஆர்யா ராஜேந்திரன். இந்தியாவிலேயே  இளம் வயதில் மேயரானவர் என்ற பெருமையை பெற்றவர். அவருக்கும், கோழிக்கோடு  மாவட்டம், பாலுசேரி தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏவான சச்சின்  தேவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இவர்களின் திருமணம் நேற்று திருவனந்தபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகமான  ஏகேஜி  அரங்கத்தில் எளிமையாக நடந்தது. முதல்வர் பினராய் விஜயன், அவரது  மனைவி கமலா விஜயன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கோவிந்தன்  மற்றும் அமைச்சர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மணமகன் சச்சின்  தேவ், தற்போதைய கேரள சட்டசபையில் மிக இளம் வயது எம்எல்ஏ என்பது  குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.