ஹோட்டலுக்குள் அரசு பேருந்து உகுந்தததகல் இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேருந்து நிலையத்தில் இருந்து மதுரைக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், நத்தத்தில் இருந்து மதுரைக்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.
கோவில்பட்டி புளிக்கடை பகுதியில் சென்று கொண்டிருந்த போது ஹோட்டலுக்குள் மோதியது. ஹோட்டலில் விநாயகர் ஊர்வலம் பார்க்க நின்ற பொதுமக்கள் மீது பேருந்து மோதியது.
இதில தேவராஜ், பாண்டி என்ற இரண்டு முதியவர்கள் சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 7 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்