லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் லக்னோ அடுத்த ஹஸ்ரத்கஞ்ச் பகுதியில் அமைந்துள்ள ஓட்டலில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஓட்டலின் அறைகளில் சிக்கியிருந்த பலர், ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து வெளியே வந்தனர். இருந்தும் தீயில் சிக்கிய காயங்களுடன் தப்பினர். தகவலறிந்த தீயணைப்பு துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து தீ மேலும் பரவாமல் தடுத்தனர்.
இருந்தும் இந்த தீவிபத்தில் சிக்கி இருவர் பலியாகினர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பலர் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டனர். தீக்காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.