திருவனந்தபுரம்: கேரளாவின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகையை முன்னிட்டு நாளை (செப்டம்பர் 6ஆம் தேதி) மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படும் என தேவசம் போர்டு அறிவித்துஉள்ளது.
கேரளாவில் கொண்டாடும் ஓணம் பண்டிகையான, திருவோணம் பண்டிகை செப்டம்பர் 7முதல் நான்கு நாட்கள் நடைபெற உள்ளது. செப்டம்பர் 8இல் கொண்டாடப்படு கிறது. இதையொட்டி அம்மாவட்ட பள்ளி, மாணவ மாணவிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது, ஓணம் பண்டிகையையட்டி, தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் வரும் 8ம் தேதி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சென்னை, திருப்பூர், கோவை, கன்னியாகுமரி, நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு, வரும் 8ம் தேதி உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஓணம் பண்டிகை பூஜைகளுக்காக சபரிமலை ஸ்ரீதர்மசாஸ்தா கோவில் நடை செப்டம்பர் 6ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும் என தேவசம் போர்டு அறிவித்து உள்ளது. அதன்படி, கோவில் வளாகம் 7.09.2022 முதல் 10.09.2022 வரை திறந்திருக்கும். உத்திராட நாள் முதல் சதயம் வரை பக்தர்களுக்கு ஓணம் சத்யாவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோயில் திறந்திருக்கும் 5 நாட்களும் உதயாஸ்தமய பூஜை, அஷ்டாபிஷேகம், கலசாபிஷேகம், களபாபிஷேகம், படிபூஜை, புஷ்பாபிஷேகம் நடைபெறும். 10ம் தேதி இரவு 10 மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை மூடப்படும். பக்தர்கள் தரிசனத்திற்கு மெய்நிகர் வரிசை முறையைப் பயன்படுத்த வேண்டும். நிலக்கல்லில் பக்தர்களுக்காக ஸ்பாட் புக்கிங் கவுன்டர்களும் அமைக்கப்பட்டுள்ளன.