ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) இந்தியாவில் ஓய்வூதிய வயதைக் கணிசமாக அதிகரிப்பதற்கும், நாட்டில் ஓய்வூதிய முறை மீதான நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்கும், போதுமான ஓய்வூதிய பலன்களை வழங்குவதற்கும் ஆயுட் கால அளவுடன் அதைச் சீரமைப்பதை முக்கியமாகப் பார்க்கிறது.
இந்தியா 2047 ஆம் ஆண்டில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 140 மில்லியனாக இருக்கும் என்றும், இந்தியா ஜப்பான் சீனா போல வயதான சமுதாயமாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இது நாட்டில் உள்ள ஓய்வூதிய நிதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் தொகை அளவு
உலகில் பல நாடுகள் தற்போது மக்கள் தொகை அளவு சரிவு, வயதான சமுதாயமாக மாறும் பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது. அதிலும் முக்கியமாக வளரும் நாடுகளில் இந்தப் பிரச்சனை மிகவும் அதிகமாக இருக்கும் காரணத்தால் பல முக்கியமான மாற்றங்களைச் செய்ய வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.
2047 ஆம் ஆண்டு
இந்தியாவில் 2047 ஆம் ஆண்டில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 140 மில்லியனாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டு இருக்கும் வேளையில் வேலைவாய்ப்பு சந்தையைப் பாதுகாப்பானதாக்க முக்கியமான நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
EPFO அமைப்பு
இந்த நிலையில் EPFO அமைப்பு அதன் விஷன் 2047 அறிக்கையில் இந்தியாவின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பது குறித்த முடிவுகளை மற்ற நாடுகளின் அனுபவம் மற்றும் எதிர்கொண்டு வரும் பிரச்சனைகளுக்கு ஏற்ப பரிசீலிக்கப்படலாம். மேலும் இது ஓய்வூதிய முறைகளின் நம்பகத்தன்மையை மேம்படுத்த முக்கியமானதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
நீண்ட கால வைப்புத் தொகை
ஓய்வூதிய வயதை உயர்த்துவது மூலம் EPFO மற்றும் பிற ஓய்வூதிய நிதிகளில் நீண்ட காலத்திற்கு வைப்பு வைக்கக் கூடிய தொகை அதிகரிக்கும், இது பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த பெரிய அளவில் உதவும் என்று மூத்த அரசு அதிகாரி தெரிவித்துள்ளார். அனைத்தையும் தாண்டி மாத சம்பளக்காரர்களுக்கு மிகப்பெரிய பாதுகாப்பு கிடைக்கும்.
60 மில்லியன் வாடிக்கையாளர்கள்
மேலும் EPFO அமைப்பு அதன் விஷன் 2047 அறிக்கையை அனைத்து மாநில அரசுகளுக்கும் வழங்கியுள்ளது, இதுகுறித்து ஊழியர்கள் அமைப்பு, நிறுவனங்கள் மத்தியில் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. EPFO அமைப்பு சுமார் 60 மில்லியன் வாடிக்கையாளர்கள் கொண்டு 12 லட்சம் கோடி ரூபாய் அளவிலான தொகையை நிர்வாகம் செய்து வருகிறது.
EPFO backs raising retirement age; India is projected to become an ageing society by 2047
EPFO backs raising the retirement age; India is projected to become an ageing society by 2047 ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க EPFO அமைப்பு ஆதரவு.. ஏன் தெரியுமா..?