கடல்சார் பாதுகாப்பு ஆலோசனைஅமெரிக்க குழு இந்தியா வருகை| Dinamalar

வாஷிங்டன் : கடல்சார் பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக, அமெரிக்க குழு இந்தியா வருகிறது.

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டு உள்ளதாவது:
இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் அமைதி நிலவவும், பாதுகாப்பை பலப்படுத்தவும் இந்தியா, அமெரிக்கா கூட்டாக செயல்பட்டு வருகின்றன. இது தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக, செப்., 5 – 8ம் தேதி வரை அமெரிக்க குழு இந்தியா செல்கிறது.வெளியுறவுத் துறையின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் டொனால்டு லுா தலைமையிலான இந்தக் குழு, இந்தியக் குழுவினருடன் விரிவாக ஆலோசனை நடத்தும்.சர்வதேச பாதுகாப்பு தொடர்பாகவும், இந்தோ – பசிபிக் பிராந்தியத்தின் கடல்சார் பாதுகாப்பு தொடர்பாகவும் இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.