கனடாவின் சஸ்காட்செவன்(Saskatchewan) மாகாணத்தில் கடந்த 3-ம் தேதி அன்று, 10 பேர் பிணமாகவும், 15 பேர் காயங்களுடனும் போலீசாரால் மீட்கப்பட்டனர்.
இது குறித்து துணை ஆணையர் ரோண்டா ப்ளாக்மோர் கூறுகையில், “அவசர அழைப்புகளை கண்காணித்துக் கொண்டிருக்கும் போது, பழங்குடியின சமூகமான ஜேம்ஸ் ஸ்மித் க்றீ நேஷனிலிலிருந்து அதிகாலை 5.40 மணியளவில் அழைப்பு வந்தது. அதைத் தொடர்ந்து அதன் பக்கத்து நகரமான வெல்டன், உட்பட 13 இடங்களிலிருந்து அழைப்பு வந்தது. இதைத் தொடர்ந்து, சஸ்காட்செவன் மாகாணத்திலிருந்து 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டது. 15 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், கொலைச் செய்யப்பட்டவர்கள் கொலை நோக்கத்துடன் தான் தாக்கப்பட்டிருக்க வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து 300 கி. மீ. தொலைவிலுள்ள மாகணத்தின் தலைநகரமான ரெஜினாவைச் சார்ந்த மைல்ஸ்(30), டேனியன் சாண்டர்சன்(31) என்னும் இருபரை சந்தேகத்தின் பேரில் போலீஸார் கைதுச் செய்துள்ளனர்.
2,500 பேர் உள்ள ஜேம்ஸ் ஸ்மித் க்றீ நேஷனிலிலிருந்து தான் முதலில் அவசர அழைப்பு போலீஸாருக்கு வந்துள்ளது. அங்குள்ள மக்கள் சஸ்காட்செவன் மாகாணத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த கோர சம்பவத்திற்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.